tamilveli

More than a Blog Aggregator

Friday, October 22, 2010

செல்போன் கதிரியக்கம் புற்று நோயை ஏற்படுத்தும்.

செல்போன் கதிரியக்கம் புற்று நோயை ஏற்படுத்தும்செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் காரணமாக புற்றுநோய், நினைவாற்றல் இழப்பு ஆகியவை ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.


இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் டேவ்ரா டேவிஸ் எழுதிய டிஸ்கனெக்ட் என்ற புத்தகத்தில் இதை அவர் குறிப்பிட்டு இருக்கிறார். செல்போன் கதிரியக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய ஆராய்ச்சி எதென்ஸ் நகரில் நடத்தப்பட்டது.

அப்போது, ஒரு எலியின் கரு முட்டை கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்பட்டது. இதன் பிறகு தாயின் வயிற்றில் இருந்து வெளி வந்த குட்டி எலி, பிறவிக்குறைபாடுகளுடன் இருப்பது தெரியவந்தது. அதோடு புற்று நோய், நினைவாற்றல் இழப்பு ஆகியவை ஏற்படுவதும் தெரியவந்தது.

Sunday, October 3, 2010

உலகில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள்

உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
1.மாரடைப்பு (Coronary heart disease)

2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases)

3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections)

4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease)

5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases)

6.HIV/AIDS

7.காச நோய் (Tuberculosis)

8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers)

9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents)

10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு /நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight)

இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் , சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தலாகும்.