Monday, May 31, 2010
Wednesday, May 12, 2010
மோப்பம் பிடிக்கும் செல்போன்!!!
குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களை கதிகலங்கச் செய்யும். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் சில நச்சுத்தன்மைகள் காற்றில் அதிகரித்து வருவதும் சாதாரணமாகி வருகிறது.இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து உங்களை காப்பாற்ற வருகிறது மோப்பம் பிடிக்கும் செல்போன். `எலக்ட்ரானிக் மூக்கு’ எனப்படும் நவீன உணர்கருவி இதுபோன்ற ஆபத்துகளை கண்டுபிடித்து எச்சரிக் கும். இந்தக் கருவியை தற்போது செல்போனுடன் இணைத்து வழங்குகிறது அமெரிக்க நிறுவனமான `ஹோம்லேண்ட் செக்யூரிட்டி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’. இந்த அமைப்பு `செல்-ஆல்’ என்ற நவீன சென்சார் கருவியை தயாரித்துள்ளது. இதனை செல்போன் களில் பொருத்திக் கொண்டால் காற்றில் நச்சு ஆபத்துகள் இருந்தால் எச்சரிக்கும். நமக்கு தீமை விளைவிக்கும் குளோரின், சாரின் போன்ற விஷ வாயுக்கள் இருந்தால் ஒலி எழுப்பும். ஒரு வேளை நீங்கள் செல் போனை வைப்ரேசனில் வைத்திருந் தால் எஸ்.எம்.எஸ். அனுப்பும். அதேபோல் அதிக நச்சுத்தன்மையை உணர்ந்தால் பலமாக ஓசை எழுப்பி உங்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் உஷார்படுத்தும். அத்துடன் எந்த இடத்தில் இந்த நச்சுவாயு பரவி இருக்கிறது என்ற தகவலை அவசர உதவி மையத்துக்கும் அனுப்பி வைக்கும். பயனுள்ள இந்தக்கருவி மிகச்சிறியதாக இருக்க வேண்டும், மிகக்குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று இதை தயாரித்த நிறுவனம் கூறுகிறது. அதற்கேற்ப இதன் விலையும் ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. |
Technology News @ LankasriTechnology.com
"மருத்துவ செய்தி
இரவில் விளக்கு போடாதீர்: புற்று நோய் வரலாம்
இரவு நேரங்களில் திடீரென விளக்கை எரிய விடுபவர்களா நீங்கள்? அப்படியானால், இனி அவ்விதம் செய்ய வேண்டாம். இரவில் விளக் கெரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஓர் ஆய்வில், இரவு நேரங்களில் திடீரென விளக்கைப் போட்டால், அதனால் ஏற்படும் வெளிச்சத்தால் நம் உடலில் உள்ள செல்கள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. இந்த அதிக அழுத்தம் புற்றுநோய்க்கு வழி வகுத்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அடர்த்தி மிகுந்த இரவில் திடீரென ஆனால் குறுகிய நேரத்துக்கு ‘பளீர்’ என்று விளக்கு எரிந்தால் கூட, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கண்டறிந்துள் ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்ற பென்ஷ்லோமோ என்பவர் கூறுகையில்,’இரவு நேரத்தில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் எவ்வித வெளிச்சமும் நமது உடலைப் பாதிக்கும். நேரத்துக்கு ஏற்றாற்போல் செயல்படும், நம் உடலின் கடிகாரம் அதனால் பாதிக்கப்படும். மிக மிகக் குறைந்த வெளிச்சம் கொண்ட இரவு விளக்குகள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அவைதான் பாதுகாப்பானவை’ என்று தெரிவித்தார்

Subscribe to:
Posts (Atom)