tamilveli

More than a Blog Aggregator

Wednesday, May 12, 2010

மோப்பம் பிடிக்கும் செல்போன்!!!


குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களை கதிகலங்கச் செய்யும். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் சில நச்சுத்தன்மைகள் காற்றில் அதிகரித்து வருவதும் சாதாரணமாகி வருகிறது.இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து உங்களை காப்பாற்ற வருகிறது மோப்பம் பிடிக்கும் செல்போன். `எலக்ட்ரானிக் மூக்கு’ எனப்படும் நவீன உணர்கருவி இதுபோன்ற ஆபத்துகளை கண்டுபிடித்து எச்சரிக் கும். இந்தக் கருவியை தற்போது செல்போனுடன் இணைத்து வழங்குகிறது அமெரிக்க நிறுவனமான `ஹோம்லேண்ட் செக்யூரிட்டி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’.
இந்த அமைப்பு `செல்-ஆல்’ என்ற நவீன சென்சார் கருவியை தயாரித்துள்ளது. இதனை செல்போன் களில் பொருத்திக் கொண்டால் காற்றில் நச்சு ஆபத்துகள் இருந்தால் எச்சரிக்கும். நமக்கு தீமை விளைவிக்கும் குளோரின், சாரின் போன்ற விஷ வாயுக்கள் இருந்தால் ஒலி எழுப்பும். ஒரு வேளை நீங்கள் செல் போனை வைப்ரேசனில் வைத்திருந் தால் எஸ்.எம்.எஸ். அனுப்பும்.
அதேபோல் அதிக நச்சுத்தன்மையை உணர்ந்தால் பலமாக ஓசை எழுப்பி உங்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் உஷார்படுத்தும். அத்துடன் எந்த இடத்தில் இந்த நச்சுவாயு பரவி இருக்கிறது என்ற தகவலை அவசர உதவி மையத்துக்கும் அனுப்பி வைக்கும்.
பயனுள்ள இந்தக்கருவி மிகச்சிறியதாக இருக்க வேண்டும், மிகக்குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று இதை தயாரித்த நிறுவனம் கூறுகிறது. அதற்கேற்ப இதன் விலையும் ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment: