வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
வருடத்தில் 6 மாத காலம் தொடர்ந்து உறங்கி 6 மாத காலம் தொடர்ந்து விழித்திருக்கும் விநோத நோயொன்றால் பாதிக்கப்பட்டுள்ள நபரொருவரை குணப்படுத்த சீன மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
லி ஷிமிங் (Li Zhiming 74 வயது) என்ற மேற்படி நபரை உறக்கத்திலிருக்கும் 6 மாத காலம் அவரது குடும்பத்தினரே அவரை சிரமப்பட்டு பராமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் தன்னிலை மறந்து உறக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் அவர் பட்டினியால் இறந்து விடாமலிருக்க அவரை அமர வைத்து அவரது வாயினூடாக சிறிது சிறிதாக சூப் உணவை அவரது குடும்பத்தினர் பருக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அந்த ஆறு மாத காலப்பகுதியில் அவர் தானாக எழுந்து மலசலகூடம் செல்லும் உணர்வு கூட இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் படுக்கையிலேயே மல சலம் கழிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லி ஷிமிங்கின் விசித்திர நோய் குறித்து அவரது மருமகளான பு யிப் (Fu Yip 42 வயது) விபரிக்கையில், ““அவர் உறக்கத்திலிருக்கும் போது கோமா நிலைக்கு சென்ற ஒருவர் போலவே இருப்பார்.
நாங்கள் கரண்டியால் சூப்பை பருக்கும் போது, அதை அவர் தன்னிச்சையாக விழுங்குவார்.
எதையும் சுயமாக செய்யவோ உணரவோ முடியாத நிலையில் அவர் காணப்படுவார். ஆனால் அவர் விழித்தெழுந்தால் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு சிறிதும் உறங்காது இருப்பார். அவர் வீதிகளில் அலைந்து திரிவதிலும் தொலைக்காட்சி பார்ப்பதிலும் இரவைக் கழிப்பார்'' என்று கூறினார்.
Saturday, August 14, 2010
Saturday, August 7, 2010
வாழைப்பூ
இது மருத்துவ குணம் கொண்ட பூ. வயிறு சம்பந்தப்பட்ட அத்தனை கோளாறுகளுக்கும் அருமருந்து.
இதில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். அதில் உடம்புக்கு தேவையான ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. இதனால் பல வியாதிகளும் குணமாகும்.
வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் கை கால் எரிச்சல் குணமாகும்.
தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.
வாழைச்சாறு வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.
சிறுநீரகத்தில் உள்ள கல் கரைய வாழைச்சாறு அதிகமாக குடிக்கவும்
படித்த தகவல்
Subscribe to:
Posts (Atom)