வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
வருடத்தில் 6 மாத காலம் தொடர்ந்து உறங்கி 6 மாத காலம் தொடர்ந்து விழித்திருக்கும் விநோத நோயொன்றால் பாதிக்கப்பட்டுள்ள நபரொருவரை குணப்படுத்த சீன மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
லி ஷிமிங் (Li Zhiming 74 வயது) என்ற மேற்படி நபரை உறக்கத்திலிருக்கும் 6 மாத காலம் அவரது குடும்பத்தினரே அவரை சிரமப்பட்டு பராமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் தன்னிலை மறந்து உறக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் அவர் பட்டினியால் இறந்து விடாமலிருக்க அவரை அமர வைத்து அவரது வாயினூடாக சிறிது சிறிதாக சூப் உணவை அவரது குடும்பத்தினர் பருக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அந்த ஆறு மாத காலப்பகுதியில் அவர் தானாக எழுந்து மலசலகூடம் செல்லும் உணர்வு கூட இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் படுக்கையிலேயே மல சலம் கழிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லி ஷிமிங்கின் விசித்திர நோய் குறித்து அவரது மருமகளான பு யிப் (Fu Yip 42 வயது) விபரிக்கையில், ““அவர் உறக்கத்திலிருக்கும் போது கோமா நிலைக்கு சென்ற ஒருவர் போலவே இருப்பார்.
நாங்கள் கரண்டியால் சூப்பை பருக்கும் போது, அதை அவர் தன்னிச்சையாக விழுங்குவார்.
எதையும் சுயமாக செய்யவோ உணரவோ முடியாத நிலையில் அவர் காணப்படுவார். ஆனால் அவர் விழித்தெழுந்தால் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு சிறிதும் உறங்காது இருப்பார். அவர் வீதிகளில் அலைந்து திரிவதிலும் தொலைக்காட்சி பார்ப்பதிலும் இரவைக் கழிப்பார்'' என்று கூறினார்.
No comments:
Post a Comment