இரவில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு படுத்தால் தூக்கம் கண்ணை சொக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது:
உறக்கத்தை நிச்சயிப்பது மெலட...ோனின் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோனில் குறைபாடு ஏற்படும்போது உறக்கம் பாதிக்கப்படும். மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்கச் செய்கிறது பசும்பால். தூக்கம் வராமல் சிரமப்பட்டவர்களுக்கு பசும்பால் கொடுத்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.
அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கறக்கப்படும் பசும்பாலில் மெலடோனின் அதிகம் இருக்கும். இதை பதப்படுத்தி பாதுகாக்கவும் முடியும். சத்துக்கள் அழியாது. சுகாதாரமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் மாடுகளின் பாலில் மெலடோனின் சத்து அதிகம் இருக்கும்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதை பதப்படுத்தி மாத்திரை போல தயாரித்து வைத்துக் கொள்கின்றனர். இதை சூடான பால் அல்லது யோகர்ட்டில் கலந்து இரவு நேரத்தில் குடித்தால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு மெலடோனின் மாத்திரை அல்லது திரவ மருந்து கொடுக்கப்படுகிறது. மெலடோனின் நாளொன்றுக்கு 3 மில்லிகிராம் அளவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்
நன்றி ராகவா
No comments:
Post a Comment