அட கடவுளே- புகை பிடித்தால் 1 கோடி அபராதம்
புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஐக்கிய அரசு எமிரேட் அரசு, இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் அதிபர் ஷேக் கலிபா பின் சயீது, புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும், புதிய சட்ட விதிமுறைகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்போர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலைப் பொருட்களை விற்போருக்கு 1.2 கோடி ரூபாய் வரை அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும், புகையிலைப் பொருட்களை விற்பதற்கு வழங்கப்பட்ட உரிமமும் ரத்து செய்யப்படும்.
No comments:
Post a Comment