tamilveli

More than a Blog Aggregator

Saturday, January 30, 2010

சிறிலங்கா தேர்தலின் பின் அதிக முறைகேடுகள் - தடுத்து நிறுத்த பான் கீ மூன் கோரிக்கை

சிறிலங்கா தேர்தலின் பின் அதிக முறைகேடுகள் - தடுத்து நிறுத்த பான் கீ மூன் கோரிக்கை

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு உள்நாட்டில் பல்வேறு வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும், இவற்றை உடனடியாக கட்டுப்படுத்தும் படியும் ஐ.நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் சிறிலங்கா அரசுக்கு திடீர் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் சார்பில் அவரது பேச்சாளர் பர்ஹான் ஹக்ம் விடுத்துள்ள செய்தியில் சிறீலங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஊடக சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தலிலும் பல்வேறு முறைப்பாடுகள் இடம்பெற்றிருப்பதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவற்றை உடனடியாக ஆராய்ந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக, நாட்டின் அனைத்து அரசியற்கட்சிகளும் செயற்பட வேண்டும் என பான் கீ மூன் கோரிக்கை விடுப்பதாக, தெரிவித்துள்ளார்.



எதிர்காலத்தில் நீதியானதும், சுதந்திரமானவும், ஆட்சி கட்டியெழுப்பப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், தேர்தல் முடிவுகளும் அதையே உணர்த்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி சார்பு பத்திரிகை லங்கா ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த, குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டமை, தேர்தல் முறைகேடுகள் பற்றி ஆராய்ந்த, சுவிற்சர்லாந்தை சேர்ந்த சர்வதேச ஊடகவியலாளர், நாட்டை விட்டு வெளியேற்ற பணிக்கபப்ட்டிருந்தமை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகவின் காரியாலயம் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தமை போன்ற செயல்கள், தேர்தலின் பின்பு இடம்பெற்ற முக்கிய வன்முறைப்போக்கான சம்பவங்கள் ஆகும்.

No comments: