ஒபாமா அரசில் 8 ஆண்டுகள் முழுமையாக பணிபுரிய முடியாது
அமெரிக்க அதிபர் ஒபாமா அரசில் வெளியுறவு துறை மந்திரியாக ஹிலாரி கிளிண்டன் உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க அரசியல் உயிர் பதவியில் இருந்து வருகிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு அதிபர் தேர்தல் வேட்பாளருக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு அதிபர் பராக் ஒபாமா அரசில் வெளியுறவுத்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது.
சமீபத்தில் அவர் ஒரு டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு ஒபாமா வெற்றி பெற்றாலும் அவரது அரசியல் என்னால் 8 ஆண்டுகள் முழுமையாக வெளியுறவு துறை மந்திரியாக பணிபுரிய முடியாது. ஏனென்றால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சவாலான பதவி.
24 மணி நேரமும் ஒயாமல் பணிபுரிய வேண்டியுள்ளது. எப்போதும் ஏதேனும் ஒரு பிரச்சினையை பற்றிய நினைவே உள்ளது. ஆனால் இந்த பதவியை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்று செய்து வருகிறேன்.
மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. எனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. எனது வாழ்க்கையில் நான் அதிபரின் மனைவி, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதி (செனட்டர்) என பல பொறுப்பான பதவிகளில் இருந்து விட்டேன். எனவே எதிர்காலத்தில் பல புத்தகங்களை படிப்பது, பல பயனுள்ள கட்டுரைகளை எழுதுவது, கல்வி கற்று கொடுப்பது என சமூக பணிகளில் என்னை ஈடுபடுத்தி கொள்ள விரும்புகிறேன்.
No comments:
Post a Comment