tamilveli

More than a Blog Aggregator

Wednesday, March 3, 2010

நித்தியானந்தா?




இன்றும் இலங்கையின் கொடும் சிறைகளில் கதறக் கதறக் கற்பழிக்கப்படும் எம்மினத்தின் பெண்களைக் காக்க எந்த வழியுமின்றி வாய்மூடி மௌனித்து வாளாயிருக்கும் இந்தச் சமூகம் நித்யானந்தாவின் மீது காட்டும் ஆர்வம், எத்தகைய மன வக்கிரம் நிறைந்த ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பறை சாற்றுகிறது. நித்யானந்தாவின் மீது காட்டப்படும் ஆர்வம் ஊடக வன்முறை சார்ந்தது, வன்புணர்ச்சி குறித்த எண்ணற்ற வழக்குகள் பதிவாகும் ஒரு சமூகத்திற்கு இத்தகைய நெறி ஒழுக்கம் குறித்த விவாதம் செய்யத் தகுதி இல்லை, அதற்கான தேவையுமில்லை, புகைப்படக் கருவிகள் நுழைய முடிந்த ஒரு நித்யானந்தாவின் படுக்கையறை வெளியில் தெரிந்து விட்டது, வெளியே தெரியாத எத்தனையோ நித்யானந்தாக்கள் போலி முகமூடிகளை அணிந்து கொண்டு சமூகத்தின் பாதுகாப்பில் சுக வாழ்வு வாழ்வதை எந்தத் தொலைக்காட்சியும் படம் பிடிக்க இயலாது.
நித்தியானந்தா? நித்தியானந்தா? நித்தியானந்தா? நித்தியானந்தா?
இன்று ஏலோர் வாக்கும் அவல் கிடைத்திருக்கிறது .
தம்பி அறிவழகன் சிறியவள் மயூ மனோ கருத்துக்களை எலோரும் சென்று உள்வாங்கி கொள்ளவேண்டும்
எனக்கு இந்தக் கோணத்தில் சிந்திப்பதை விட இந்த செய்தியை வெளியிட்ட சண் டிவி மீது சந்தேகமாக இருக்கிறது
ஒருவனின் தனிப்பட்ட அந்தரங்க அறைக்குள் எப்படி சென்றிர்கள்.
அந்த பெண்ணின் முகத்தை காட்டாமல் மறைத்ததன் நோக்கம் என்ன ?
அவர்கள் இருவரும் அன்னியோநியமாகத்தானே இதை ஏன் படம்பிடித்திர்கள்
எம் குல பெண்களை இராணுவம் சித்திரவதை செய்தபோது எங்கே சென்றிகள்
உங்கள் வியாபாரத்திற்கா காமத்தை கருப்பொருளாய் கொள்விர்களா?
இதையும் சிந்தின்கள் சாமி செய்தது சரி என்றுசொல்லவில்லை சன் டிவி செய்தது மட்டும் சரியா?


Mayoo Mano
அண்ணா, இதைத்தான் எதிர்பார்த்தேன். ஒருவன் குறித்த மதத்தை சொல்லி, காவி கட்டியவுடனே அவனுக்கு சாமியார் பட்டம் கொடுத்துவிட்டு பின்னாலேயே அலைந்து அவனைக் கடவுளாக்கி உருகி மடிந்து விட்டுப் பின், அவனது தனிப்பட்ட வாழ்க்கை வெளி வந்ததும், கத்திக் கூப்பாடு போடும் இந்த மக்களை எரித்தால் போதும் என்றிருக்கிறது. ஒருவனது படுக்கையறைக்குள் புகுந்து அவன் சுயத்தை வெளிக்கொண்டு வந்து படம் காட்டினால் தான் நீங்கள் அவன் போலி என்று நம்புவீர்கள் என்றால் இங்கு இன்னும் எத்தனை ஏ படங்களை தொலைக்காட்சிகள் வெளிக் கொணரப்போகின்றன. பாழாய்ப் போய்க் கொண்டிருக்கும் உலகத்துக்கு மெல்ல அவல் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான்.

No comments: