Wednesday, March 3, 2010
இரத்தத்தில் சர்க்கரை அளவுக் குறைவதற்கு காரணங்கள்
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுக் குறைவதற்கு பல காரணங்கள் உண்டு. அதாவது, போதிய உணவு உட்கொள்ளாமல் இருப்பது, விரதங்கள் போன்றவற்றால் உணவைத் தவிர்ப்பது.
தவறான அளவு நீரிழிவு மாத்திரை அல்லது இன்சுலின் உட்கொள்ளுதல். மது உட்கொள்ளுதலும் காரணமாகிறது. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்சுலின் மற்றும் சில மாத்திரைகள் மெதுவாக சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது. இதனால் சர்க்கரையின் அளவை அடிக்கடி சரிபார்த்தல் நல்லது..
ஈரல் நோய் உள்ளவர்கள் சர்க்கரை தாழ்நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஏனென்றால் இங்கு தான் குளுக்கோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது..
தேவைக்கு அதிகமாக உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் காரணமாகும். தேவைக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்துவிடும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment