சர்க்கரை... சர்க்கரை... சர்க்கரை.....
கி.பி.2000த்தில் உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 17.8 கோடி மக்கள் தொகையில் 2.8 கோடிப்பேர். 2003-ல் 18.9 கோடி. இது கி.பி.2030ல் இரு மடங்காகி 35 கோடியைத் தாண்டும் என்ற தகவல் நம்மை ஏகமாய் மிரட்டுகிறது. அது போகட்டும். இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா? 1995-ல் 1.9 கோடி. 2005-ல் 3.5 கோடி, 2007ல் 4 கோடி, 2008 ஜூன் 8ம் நாளின் படி 4.1 கோடி ( உலக அளவில் 24.0 கோடி) கி.பி.2025ல் வெற்றிகரமாக 7 கோடியை எட்டும் என உலக நல நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அப்போது உலகில் இந் தியா, சீனா, அமெரிக்கா மூன்று நாடுகளுமே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் முன்னணியில் இருக்குமாம்.ஏன் சர்க்கரை நோய்
அதெல்லம் சரி! சர்க்கரை நோய் என் றால் என்னப்பா... என்கிறீர்களா? நாம் உட் கொள்ளும் அனைத்து உணவும், உணவு மண்டலத்தில் செரிமானம் ஆகின்றது. உட் கிரகித்தலின் மூலம் இரத்தத்தில் சர்க்கரை யாக கலக்கிறது. ஆமாப்பா.. நீங்கள்இட்லி சாப்பிட்டாலும் சரி, நெய் உருண்டை தின்றா லும் சரி, அல்வா முழுங்கினாலும் சரி, மட் டன், மீன் என எது உண்டாலும் அது இறுதி யில் சர்க்கரையாக மாற்றப்பட்டே இரத்தத்தில் கலக்கிறது.
இரத்தம் மூலம்தான் உடல் உறுப்பு களுக்கு வேண்டிய சக்தி கொடுக்கப்படுகிறது. இந்த சுழற்சியில், இரத்தத்தில் உடலுக்குப் போக அதிகப்படியான சர்க்கரை இருந்தால் என்ன ஆகும் தெரியுமா...! கணையம் என்ற சுரப்பி சுரக்கும் இன்சுலின் என்ற ஹார் மோன், அதிகமான சர்க்கரையை, கிளை கோஜனாக மாற்றி, எதிர்கால சேமிப்பாக்கு கிறது. இந்த இன்சுலின் போதாவிட்டாலோ, சரிவர வேலை செய்யாவிட்டாலோ ரோத னைதாம்ப்பா..! அதுதாண்ணே சர்க்கரை வியாதி என்ற அருமையான பேருப்பா.. நாம் சர்க்கரை சாப்பிடாததற்கு...!
சர்க்கரையின் காரணி
சர்க்கரை நோய் நமது வாழ்க்கை முறை தொடர்பான வியாதியாகிவிட்டது. இப்போது பொதுவாக பரம்பரை, பரம்பரையாக வரும் என்றாலும், இன்று அதையெல்லாம் தாண்டி, குண்டாக இருப்பவர்களுக்கும் நவீன உணவு மற்றும் வாழ்க்கை முறையும் தான் முக்கியக் காரணிகள் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நாம முன்னெல்லாம், எல்லா இடத்துக்கும் நடந்தே செல்வோம். இன்றைக்கு இருசக்கர வாகனங்கள் நம் நடையைக் குறைத்துவிட்டன. நாம் நடக்க சோம்பேறிகளாகிவிட்டோம். அதுவும் கூட சர்க் கரை நோய்க்கான காரணிகளில் ஒன்றாகி விட்டது. அது மட்டுமில்லேப்பா, இன்றைக்கு வாழ்க்கைச் சூழலில் அனைவருக்கும் எல்லா சூழலிலும் பல்வேறு வகையான மன அழுத்தங்கள், மன இறுக்கங்கள் உள்ளன. அதுவும் கூட சர்க்கரை நோய் வருவதற்கான காரணமாம்பா..! அதுமட்டுமல்ல.. நகர்மயமா தல், தொழில்மயமாதல், சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் மாற்றங்களினால் வாழ்விய லில் அவசர கதியில் செயல்படுவதால்.. ஏரா ளமான உணவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நோய்களில் முக்கிய மானது சர்க்கரை நோய்ப்பா...!
உறுப்புகளை சிதைக்கும் சர்க்கரை நோய்!
சர்க்கரை நோய் என்பது அனைத்து நோய்களின் தாயகம்; உற்பத்திக்கூடம் என்றே சொல்லலாம். இதயம், இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, சிறுநீரக செயலி ழப்பு, நரம்பு பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு, ஆண்மை இன்மை ஏற்படுகிறது. விரல்கள், பாதங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. விரல் களிலுள்ள நரம்புகள் சிதைந்து போய், கான் சிரூன் ஏற்பட்டு விரல், கால்களை எடுத்து விடும் நிலை ஏற்படுகிறது.
விழிப்புணர்வற்ற அரசு
மருத்துவ சோதனைக்கு பின்னும் கூட, சர்க்கரை நோயாளிகளிடம் ஏராளமான கவனக்குறைவு உள்ளது. பெரும்பாலான நோயாளிகள் மருத்துவரிடம் சென்றாலும், நோய்க்கான அறிகுறி நின்று, நோய் கட்டுப் பாட்டு நிலைக்கு வந்ததும், மருத்துவரிடம் செல்வதை நிறுத்திவிடுகின்றனர். பெரும்பா லான நோயாளிகள், இந்திய பாரம்பரிய, சித்தவைத்திய முறைகளை எடுக்கிறேன் என அலோபதி மருந்துகளை கைவிட்டுவிடுகின் றனர். சர்க்கரை நோய் அதிகரித்தவர்களில் நிறைய நோயாளிகள் இன்சுலின் போட பயந்து அல்லது இதுவே பழக்கமாகிவிடும் எனப்பயந்து, இதனைத் தவிர்க்கின்றனர். இத னால் தொடர்ந்து, மருத்துவரை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். இதனால் சர்க் கரை நோய் முற்றி சீக்கிரமே அவர்களின் வாழ்நாள் முடிந்துவிடுகிறது. மேலும் வள மின்மை, மருத்துவ மீட்பு வசதியின்மை, மாநில அரசின் நிதிப்பற்றாக்குறை போன்ற வற்றையும், சர்க்கரை நோய்க்கான அரசின் தரமான சிகிச்சைக்கான தடையாக உள்ளன.
கவனம்... கவனம் ...கவனம்...!
மிகக்கவனமாக இருந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். கவனமாக இருந் தால் சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அத னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக் கூடாது என்பதை தெளிவாகத் தெரிந்து நடந்து கொள்வது உயிர்வாழ்வதற்கு உதவிசெய்யும்.
நம்புவதும்....நடப்பதும்...!
சர்க்கரை நோயுள்ளவர்களிடம் ஒரு தவறான கருத்து உள்ளது. எண்ணெய் பொரித்த பொருட்களை, கொழுப்பு உணவு களை உண்ணலாம் என நினைக்கின்றனர். இது இரத்தத்தின் கொழுப்பை அதிகரித்து, மோசமான பின்விளைவுகளை, மிகை இரத்த அழுத்தத்தை உண்டு பண்ணும். இரத்தத்தில் அதிகமான வைட்டமின்-சி இருந் தால், அது 62 சதவீதம் சர்க்கரை நோய் வரு வதை தடைசெய்கிறது. நீங்கள் உணவருந்த உட்கார்ந்ததும், தட்டை 4 பகுதிகளை கற்பனை கோடு வரைந்து கொள்ளுங்கள். 1/4 பங்கு தானியம், உணவு, 1/4 பங்கு புரதம், 1/4 பங்கு காய்கறிகள் உண்ணவும், காரட், கீரை, தக்காளி மற்றும் கொழுப்பற்ற 1 டம்ளர் மோர் அருந்தவும், இவையெல்லாம் உங்களின் சர்க்கரை நோயைக் குறைக்கும்.
உயிர்காக்க...!
சர்க்கரைக்கு மாறாக பயன்படுத்தும் பொருட்கள், சர்க்கரையைவிட மோசமான விளைவைத் தரும், செயற்கை இனிப்பு களையும் பயன்படுத்துவது தவறு. அதை உண்ணுவதால் நம் உடல் சீனிக்காக ஏங்கி தவம் கிடக்கிறது. தினமும் இரவு படுக்கப்போ கும் முன், கால் மற்றும் பாதத்தை சூடான உப்பு நீரில் கழுவ வேண்டும். கண்களை ஒவ் வொரு ஆண்டும் சோதனை செய்ய வேண் டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். நவம்பர் 14 உலக சர்க்கரை தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. மக்களை சர்க்கரை நோயிலிருந்து காக்க நாம் உறுதிபூணுவோம்.
செய்ய வேண்டியது தவிர்க்க வேண்டியது
* தினசரி 30 நிமிட நடை * ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது
* 20 நிமிட உடற்பயிற்சி * மாவுப்பொருள், கொழுப்பு, எண்ணெய்யில் பொரித்தவை, சிப்ஸ், கேக், ஐஸ்கிரிம்
* குறைவாக காபி, டீ. பயன்படுத்தவும் * பிஸ்கட், சாக்லெட், கொட்டை போன்றவை
* உடல் பருமனை கட்டுப்படுத்துவது * முட்டையின் மஞ்சள் கரு, ஆடு, கோழி முதலியவை தவிர்த்தல்
* குறைவான மாவுப்பொருள் புரதம் * அதிக உணவை உட்கொள்வது
உட்கொள்வது * பட்டினி கிடப்பது
* அதிக நார்ச்சத்துள்ள * அதிக உப்பு, கருவாடு,
பொருட்களை உண்ணுதல் ஊறுகாய் பயன்படுத்துவதை தவிர்க்கவும்
* ஏராளமான முழு தானியங்களை
உட்கொள்ளுதல்
* கால்விரல், பாதங்களை சுத்தமாக வைத்திருத்தல்
* வைட்டமின் சி உட்கொள்ளுதல்
* ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்
No comments:
Post a Comment