ஆயில் குறைத்தால் ஆயுள் கூடும்!
வெள்ளி, 26 நவம்பர் 2010 21:38 . .மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி எண்ணெய். இன்று பல நோய்களுக்கு மூலகாரணம் எண்ணெய் கலந்த உணவுகள் தான். எல்லா எண்ணெயும் கொழுப்பு தான். நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். சூரியகாந்தி
போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும்.
எனவே எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது. ஜீரோ கொலஸ்ட்ரால் என்பது தவறு. எல்லா எண்ணெயும் ஒன்று தான். ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., – 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் எப்படி கலோரியை அதிகப்படுத்துகிறது என்றால், 10 மி.லி., எண்ணெய் 90 கலோரி, ஒரு சாதா தோசை 80, ஒரு பூரி 260, வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை 200 – 250, பிரியாணியில் 6,550, ஒரு பிளேட் பிரியாணியில் 1,600 கலோரிகள் உள்ளது. அதிக எண்ணெய் இரத்த குழாய்களில் படிவதால் ரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது.
அதிக எடை, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுகின்றன. பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய், கடலெண்ணெய் போன்றவற்றை 15 – 20 மி.லி., வரை பயன்படுத்தலாம். திரும்ப திரும்ப சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில், சமைக்கப்பட்ட பலகாரங்கள் கேன்சரை ஏற்படுத்தும். உணவில் எண்ணெய் காரணமாகவே கலோரி அதிகமாகிறது. அதிக கலோரி கொழுப்பாக மாறி வயிற்றில் படிகிறது. இதுதான் தொந்தி, உடல் எடை கூடுவதற்கு முன் தொந்தி வரும். தொந்தியிலுள்ள கொழுப்பு கரைந்து கெட்ட கொழுப்பாக மாறுகிறது.
அது ரத்தக் குழாயை அடைத்து மாரடைப்பு ஏற்படுத்துகிறது. வளரும் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. கலோரி சாப்பிட்டால் ஒரு கி. மீ., நடக்க வேண்டும். 500 கலோரி சாப்பிட்டால், 10 கி.மீ., நடக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் மற்றும் இனிப்புகளில் கலோரி அதிகம் (400 – 600). எனவே நடை, உடற்பயிற்சி இல்லாமல் அதிக கலோரி உணவுகளை உண்பது பிரச்னை. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தக் குழாயும், ரத்தமும் பாதித்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.
சைவ உணவு உண்பவர்கள் தேங்காய் பால், தயிர் அதிகம் பயன்படுத்தக் கூடாது. எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் கலோரிகள், இரண்டு சமோசா 256, இரண்டு போண்டா 283, மிக்ஷர் 100 கிராம் 520, பகோடா 100 கிராம் 474, இரண்டு வறுத்த மீன் 256, இரண்டு வடை 243, முறுக்கு 100 கிராம் 529, உருளை சிப்ஸ் 100 கிராம் 569, சில்லி சிக்கன் 100 கிராம் 589 கலோரிகள். நமது ரத்தத்தில் கொழுப்பு 200 மி.கி., கீழ், டி.ஜி.எல்., கொலஸ்ட்ரால் 150, எல்.டி.எல்., 100க்கு கீழ், எச்.டி.எல்.,(நல்ல கொலஸ்ட்ரால்) ஆண்களுக்கு 40, பெண்களுக்கு 50க்கு மேல், வி.எல்.டி.எல்., கொழுப்பு 30க்கு கீழ் மேலும் யாருக்கு கொலஸ்ட்ரால் இருக்குமென, உருவத்தை வைத்து கூற முடியாது.
சாதாரணமாக பலர் வாகனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை கூட உடலுக்கு கொடுப்பது இல்லை. இதில் சர்க்கரை உள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியம். கோவை டயபடிஸ் பவுண்டேஷனில் வருடத்திற்கு ஒரு முறை பணம் செலுத்தி, ஒரு வருடம் சிகிச்சை பெற்று செலவை குறைக்கலாம். சி.டி.எப்.,ல் முழு உடல் பரிசோதனை, கண்காணிப்பு சிகிச்சை முகாம் இன்று முதல் 27ம் தேதி வரை நடைபெறும். உணவு முறை உடற்பயிற்சியை முதன்மைப்படுத்திய சிகிச்சை சி.டி.எப்., ரிசர்ட் மருத்துவமனையில் செய்யப்படுகிறது. சர்க்கரையை நீக்க மூன்று முதல் ஐந்து நாள் அனுபவ பயிற்சி வழங்கப்படுகிறது.
- டாக்டர் சேகர்,
Friday, November 26, 2010
நாம் குடிக்கும் பியரில் இத்தனையா?
ரின் இன்னொரு ஆச்சரியமான உபயோகம். உண்மையில் ஒரு பச்சை முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை பீரில் நன்றாக கலக்கி அடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இது இரண்டு நாட்கள் மட்டுமே உப்யோகப்படும். எதற்கு? என்கிறீர்களா!! ஷாம்பூதான்!! நீங்கள் தலையில் ஊற்றிப்பாருங்கள்... அலாதியான நுரை வரும்!! இது பலரால் உபயோகப்படுத்தப்பட்டு பாராட்டுப்பெற்ற ஷாம்பூ!!
இன்னொரு உபயோகம்! நம்ம அறை நாற்காலி, மேஜை ஆகியவற்றுக்கு பாலீஷ் போடாமல்(துடைக்காமல்!!!) பழையதாகத்தெரியும். பாட்டிலை தொறந்தாச்சு.. கொஞ்சம் எடுத்து ஒரு துணியில் நனைத்து துடைத்துப்பாருங்கள்!! அசந்து போய்விடுவீர்கள்! பளபளன்னு ஜொலிக்கும்!!
தோலைப் பாதுகாக்க மகளிர் அணி பல அழகு நிலையங்களுக்குப் படையெடுக்கும். மகளிருக்கு இவ்வளவு அழகு நிலையம் வைத்திருக்கும் இந்த உலகம் ஆண்களுக்குன்னு ஏதாவது செய்கிறதா? சரி விடுங்க!! நம்ம கண்டு புடிக்க மாட்டமா என்ன? நம்ம தோலைப்பாதுகாக்க சிறந்த வழி?.....நம் அம்மிணிகள் குளிக்கும் தண்ணியில் வேப்பிலை,கறிவேப்பிலை,தயிர்,கழுதைப்பாலெல்லாம் ஊத்தி ஊறவைச்சுக் குளிப்பார்கள்! இதெல்லாம் வேஸ்ட் மக்கா! குளிக்கும் டப்பில் இரண்டு பீரை ஊத்துங்க! உள்ளே கொஞ்ச நேரம் உக்காருங்க!! டப் இல்லையா? இரண்டு பாட்டில் பீரை தலை முதல் கால் வரை ஊத்தி கொஞ்ச நேரத்தில் குளித்துவிடுங்கள்!!அப்புறம் பாருங்க உங்க தோல் மினுமினுப்பை!! எல்லாரும் உங்க அட்வைஸுக்கு கியூவில் நிற்பார்கள் படித்ததில் பிடித்தது.

Sunday, November 21, 2010
இரவில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு படுத்தால் தூக்கம் கண்ணை சொக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இரவில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு படுத்தால் தூக்கம் கண்ணை சொக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது:
உறக்கத்தை நிச்சயிப்பது மெலட...ோனின் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோனில் குறைபாடு ஏற்படும்போது உறக்கம் பாதிக்கப்படும். மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்கச் செய்கிறது பசும்பால். தூக்கம் வராமல் சிரமப்பட்டவர்களுக்கு பசும்பால் கொடுத்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.
அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கறக்கப்படும் பசும்பாலில் மெலடோனின் அதிகம் இருக்கும். இதை பதப்படுத்தி பாதுகாக்கவும் முடியும். சத்துக்கள் அழியாது. சுகாதாரமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் மாடுகளின் பாலில் மெலடோனின் சத்து அதிகம் இருக்கும்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதை பதப்படுத்தி மாத்திரை போல தயாரித்து வைத்துக் கொள்கின்றனர். இதை சூடான பால் அல்லது யோகர்ட்டில் கலந்து இரவு நேரத்தில் குடித்தால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு மெலடோனின் மாத்திரை அல்லது திரவ மருந்து கொடுக்கப்படுகிறது. மெலடோனின் நாளொன்றுக்கு 3 மில்லிகிராம் அளவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்
நன்றி ராகவா

Subscribe to:
Posts (Atom)