tamilveli

More than a Blog Aggregator

Saturday, February 25, 2012

தமிழர்களுக்கு குரல்கொடுத்த மரியா கெல்வின் இன்று கொல்லப்பட்டார் !



ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார் என அதிர்வு இணையம் அறிகிறது. சிரியாவில் அந் நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தை உலகறியச் செய்யவும், செய்திகளைச் சேகரிக்கவும் அவர் அங்கே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணியாற்றிய இவர், போர் நடைபெறும் அனைத்து நாடுகளுக்கும் சென்றுள்ளார். 2001ம் ஆண்டு இவர் இலங்கை சென்றிருந்தவேளை ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி தனது ஒரு கண்ணை இழந்தார். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டபோது தன்னை மயக்காமல் அவசர கண் சத்திர சிகிச்சையை செய்ய அவர் துணிச்சலோடு அனுமதித்தார். இருப்பினும் அது பலனளிக்கவில்லை.

பிரித்தானியாவின் முன்னணி ஊடகமான சண்டே டைம்ஸ், டைம்ஸ் ஒன் லைன் ஆகிய நிறுவனங்களுக்கு இவர் ஊடகவியலாளராகப் பணியாற்றினார். 2009ம் ஆண்டு புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தத்தில், வெள்ளைக்கொடியோடு செல்லவிருந்த புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோருடன் அவர் நேரடித் தொடர்பில் இருந்தார். அவர்கள் பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தப்படவேண்டும் என்பதில் அவர் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார். கோத்தபாய ராஜபக்ஷவிடம் இருந்து, சில உத்தரவாதங்களை இவர் பெற்று, பின்னர் புலித்தேவனோடு தொடர்புகொண்டு சில தகவல்களையும் இவர் பரிமாறி இருந்தார். இருப்பினும் இராணுவத்தினர் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடைந்தவர்களைக் கொலைசெய்தபோது, தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டு இலங்கையில் போர் குற்றம் நடந்துள்ளது என முதல் முதல் அறிவித்தவரும் இவரே ஆவார் !

ஐ.நா அதிகாரிகளுடன் இரவிரவாகப் பேசி, சரணடையும் புலிகளை, மற்றும் மக்களையும் காப்பாற்ற இவர் அரும்பாடுபட்டார். தமிழர்கள் இலங்கையில் அடக்கி ஒடுக்கப்படுவதை இவர் வெளிச்சம்போட்டுக் காட்டினார். மரியா கெல்வின் கொல்லப்பட்டது தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றம் உடனடியாகவே இரங்கலை வெளியிட்டுள்ளது. பிரித்தானியப் பிரதமர் தமது அலுவல்களை இடை நிறுத்தி தனது அனுதாபச் செய்தியை தற்போது வெளியிட்டுள்ளார்.

சக ஊடகம் என்ற வகையில், அதிர்வு இணையமானது மரியா கெல்வின் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுகிறது. சிரிய அரசின் காட்டுமிராண்டித் தனத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். மரியா கெல்வின் ஆத்மசாந்திக்கு அதிர்வு இணையமும் பிரார்த்திக்கிறது. அவர் தமிழர்களுக்கு செய்த பல உதவிகள் இன்னும் வெளிவராமல் இருட்டில் இருப்பதை ஒரு சிலரே அறிவார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Sunday, February 12, 2012


நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன் இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றமை உண்மைதான் பாகிஸ்தான் தூதுவர 

நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன், ஒரு நாட்பு நாடு என்ற முறையில்நாம் அவர்களுக்கு ஆயுதத்தைக் கொடுத்தோம். எனினும் இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றமை உண்மைதான்.
 இனிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.
 நோர்வே பாராளுமன்றத்தில் தமிழ் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் முன்னாள் இலங்கைக்கான பிரதி பாகிஸ்தான் தூதுவராக இருந்து தற்போது நோர்வேக்கு தூதுவராக பதவி உயர்த்தப்பட்டுள்ள பாகிஸ்தான் தூதுவர்.
 இவர் பாகிஸ்தான் தூதுவராக இருந்த காலத்தில் பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை பணிப்பாளர் இலங்கையில் நிலை கொண்டிருந்தமையும் கொழும்பில் நடந்த தற்கொலை தாக்குதலில் குறித்த தூதுவர் உயிர் தப்பியும் இருந்தார்.
 அல்கொய்தா இயக்க பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் கொல்லபட முதலே பாகிஸ்தான் நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு தென்கிழக்கு ஆசியாவில் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்து விட்டது.
 இன்று அமெரிக்காவால் கைவிடப்பட்ட நிலையில் சீனாவின் சலுகைகளுக்கு மட்டும் கை ஏந்தும் நிலையில் இருக்கும் பாகிஸ்தான் தூதுவராக இருக்கும் நீங்கள் காஷ்மீரில் இந்திய படைகள் செய்யும் அவலத்திற்கு இங்கு 300 பேர் மத்தியில் உரையாற்றுகிறீர்கள்.
 காஷ்மீரில் அழிக்கபட்ட இனத்தில் இருந்து வந்ததாக கூறும் நீங்கள் தூதுவராக இருக்கும்போதுதான் தமிழர்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உங்கள் ராஜதந்திர அறிவுப்படி இலங்கையில் கொல்லப்பட்டார்கள்.
 இது தமிழருக்கு மட்டும் அல்ல நோர்வேயின் சமாதான முகத்திரைக்கு நீங்கள் வைத்த தீயே. இவ்வாறு இருக்கும்போது நோர்வேயின் உதவியை காஷ்மீருக்கு எந்த நிலையில் கேட்கிறீர்கள் என கேட்டபோது?
 இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.
 அவர் மேலும் கூறியதாவது,
 ஆனால் நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் அவர்களுக்கு இலங்கையில் நடந்தவற்றிக்கு.
 இனிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன்.
 பாகிஸ்தான் எந்தவித முன்னணிச் செயற்பாடுகளிலும் இலங்கை யுத்த விடயத்தில் ஈடுபடவில்லை. இராணுவ போர் குற்றம் மனிதஉரிமை விடயங்களை கவனித்தால் நான் அதைப்பற்றி விரிவாக போகவிரும்பவில்லை.
 நான் இலங்கையில் அண்ணளவாக ஒரு வருடமும் 6 மாதங்களும் தங்கி இருந்தேன். எனக்கு தெரியும் இரண்டு பக்கமும் முறைப்பாடுகள் உள்ளது.
 எனது நண்பரே! யுத்தம் மிகவும் வலியானது. இலங்கைக்குப் பாகிஸ்தான் ஒரு நட்பு நாடு என்ற முறையில் தனது உதவியை செய்தது. இலங்கை அரசு ஜனநாயகப்படி தெரிவு செய்யபட்ட ஒரு அரசு என்பதால் பாகிஸ்தானின் உதவியை நாடியது. ஆயுதங்களை தருமாறு கோரியது.
 ஐ.நா. சட்டப்படி நாம் அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்தோம். எனக்கு தெரியும் புலிகள் சில விடயங்களுடன் முரண்பட்டனர். அவை மிகவும் சிறியவை.
 பின்னர் சுனாமி வந்தது. சுனாமியே புலிகளை பலவீனபடுத்தியது. ஆனால் பாகிஸ்தான் அரசு புலிகளை பலவீனபடுத்தவில்லை. நான் இலங்கையில் தங்கி இருந்தபோது சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் தங்கள் உயிர்களை சுனாமியில் பரிதாபமாக பறிகொடுத்தனர்.
 பின்னர் நான் வெளியேறும்போது இலங்கை இராணுவம் யுத்தத்தை ஆரம்பித்தது. நான் வெளிக்கிட்ட பின்னரே யுத்தம் ஆரம்பமானது. நான் நேரடியாக சம்மந்தபடவில்லை.
 யுத்தில் மேலும் இலங்கை இராணுவம் எங்களிடம் அனுமதியோ ஆலோசனையோ கேட்கவில்லை. அவர்கள் அனுபவம் வாய்ந்த படைகள். அவர்களின் அனுபவத்தில் செய்தனர். நான் ஏற்றுக்கொள்கிறேன். நானும் உணர்கிறேன். அங்கு மனித உரிமை மீறல்கள் கொலைகள் நடந்துள்ளது.
 எனது நண்பரே! யுத்தம் என்பது மிகவும் கொடிய ஒரு பாதை. எவர் எந்த பக்கத்தால் வருபவர் என்று தெரியாது. நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் அவர்களுக்கு இலங்கையில் நடந்தவற்றிக்கு. இரண்டு பக்கமும் இந்த கொடிய இன மோதலில் துன்பப்பட்டுள்ளார்கள்.

Saturday, February 11, 2012

இதை கட்டாயம் எல்லோரும் பாருங்கள்.


ப்பாருங்க arunka
இது மிக முக்கியமானது,
இதை கட்டாயம் எல்லோரும் பாருங்கள்.
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் எங்கள் தமிழ் இருந்துள்ளது.அதுவும் அங்கே முதல் மொழியாக இருந்துள்ளது என்பதை இந்த கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.இது சீனாவில் உள்ள canton என்கிற நகரத்தின் வடபகுதியிலிருந்து 500 மைல் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அந்த இடத்தின் பெயர் Chuaan Chou என அழைக்கப்படுகிறது.இது ஒரு துறைமுக நகரம் ஆகும்.பழைய காலங்களிலும் இது முக்கிய துறைமுக நகரமாக இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.எம் அன்பான தமிழர்களே ஆண்ட தமிழினம் காலம் காலமாக அழித்து ஒடுக்கப்பட்டுள்ளது.எந்த நாடுகளில் நாம் இருந்தோமோ அந்தந்த நாடுகளில் நாங்கள் வாழ்ந்த வரலாறுகள் தடயமின்றி அழிக்கப்பட்டுள்ளது.இது தெளிவான உண்மையாகும் .

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்??????



வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்

உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
************************************************************
Madheswaran Padmanabhan என் inboxகு
அனுப்பிய செய்தி இது
மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலைப் பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைக.ள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது.. நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது.
இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?? துரதஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்..
ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும்
மூச்சை இழுத்து விட வேண்டும் ..
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்..
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ
அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால்
நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது
இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.. உயிரைக் காக்கும் இது போன்ற விசயங்களை பகிருங்கள் !!!!
-Bharathi Raja
நன்றீ –உதயசூரியன்

Friday, February 10, 2012

தேன் ஒர் அற்புதமான மருந்து!!!!


தேன் மனினுக்கு கிடைத்த ஒர் உன்னதமான மருந்து ஆகும். தேனை பாவிப்பதன் மூலம் பலவிதமான நோய்களில் இருந்து விடுபடலாம். தேனின் மூலம் பெறும் நன்மைகள் சிலவற்றை பார்ப்போமா.
1.குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து, பெண்களிடத்திலுள்ள மலட்டுத்தனத்தைத் தேன் போக்கி விடுகிறது.
2.குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே, இது நோயா? இல்லை. வயிற்றுப் பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை. குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது.
3.என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
5.என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
6.உடல்குண்டானவர்களை மெலிய செய்யும்.உடலுக்கு ஊட்டச்சத்து தரும்.சுவாச காச நோய்களை குணமாக்கும். விக்கல் நோயை போக்கும்.
7.உடலில் விஷம் இருந்தால் முறிக்கும். சூலரோகங்களை போக்கும்.உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும். நீண்ட ஆயுளை தரும். பெண்களின் கருப்பையில் இருக்கும் நோய்களை குணப்படுத்தும். குழந்தைகளை ஊட்டத்துடன் வளர்க்க பயன்படும்.
தேன் மனினுக்கு கிடைத்த ஒர் உன்னதமான மருந்து ஆகும். தேனை பாவிப்பதன் மூலம் பலவிதமான நோய்களில் இருந்து விடுபடலாம். தேனின் மூலம் பெறும் நன்மைகள் சிலவற்றை பார்ப்போமா.
1.குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து, பெண்களிடத்திலுள்ள மலட்டுத்தனத்தைத் தேன் போக்கி விடுகிறது.
2.குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே, இது நோயா? இல்லை. வயிற்றுப் பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை. குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது.
3.என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
5.என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
6.உடல்குண்டானவர்களை மெலிய செய்யும்.உடலுக்கு ஊட்டச்சத்து தரும்.சுவாச காச நோய்களை குணமாக்கும். விக்கல் நோயை போக்கும்.
7.உடலில் விஷம் இருந்தால் முறிக்கும். சூலரோகங்களை போக்கும்.உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும். நீண்ட ஆயுளை தரும். பெண்களின் கருப்பையில் இருக்கும் நோய்களை குணப்படுத்தும். குழந்தைகளை ஊட்டத்துடன் வளர்க்க பயன்படும்.

இரண்டு மணித்தியால வேலையைஇரண்டு நிமிடத்தில் செய்ய புதிய முறை!!!!!!!கண்டு பிடித்தவர்கள் எம்தமிழர்!!!




















 இரண்டு மணித்தியால வேலையை இரண்டு நிமிட சாதனை விஞ்ஞானிகள் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் , அரசியல் ஆலோசகர் விஜயகலாரத்தினம் , இயக்குனர் (பிருத்தானியா) முருகதாஸ், நிரந்தர செயலர் ஜெயந்தன் ஆகியோருடன் தேர்தல் ஆணையாளர் டொக்டர் ராஜஜோகேஸ்வரன் ஆகியோர்  இந்த கண்டுபிடிப்பின் கதா நாயகர்கள் ஆகும் .அபூர்வ 



நாடுகடந்த அரசு விஞ்ஞானிகளின் இரண்டு நிமிடத்தை எப்படி இரண்டு மணித்தியாலம் ஆக்குவது என்பதை மண்டைக்குள் வைத்து எண்ணியபடி இருப்பதையே மேலே உள்ள படங்களில் காண்கின்றீர்கள் . புதிய  



இதில் ஒரு விஞ்ஞானியை "ஒருபேப்பர் பத்திரிகை மடக்கி பிடிச்சு கட்டிப் போட்டு " கேட்ட பொழுது ஏதோ அணு விஞ்ஞானம் மாதிரி உண்மை தயங்கி தயங்கி தான் வெளிவந்ததாம் .( பக்கம் 11  http://www.orupaper.com/wp-content/uploads/2012/02/Issue_163.pdf)

இரண்டு நிமிடம் அந்தாளை இழுத்து பிடிச்சு கதைச்சனாங்கள்  , 
பிறகு 
சும்மா அறிக்கையிலை இரண்டு மணித்தியாலம் 
என்டனாங்கள் எண்டாராம் .
அதோடை 
சந்திச்சது தான் முக்கியம் 
இரண்டு நிமிசமும் 
இரண்டு மணித்தியாலமும் 
ஒண்டுதானே 
என்டுகினமாம் 

இப்ப பார்த்தியளே 
இரண்டு மணித்தியாலமும் இரண்டு நிமிடமும் 
ஒண்டோ இல்லையோ !!!!

சந்தேகங்களுக்கு அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் , அரசியல் ஆலோசகர் விஜயகலாரத்தினம் , இயக்குனர் (பிருத்தானியா) முருகதாஸ், நிரந்தர செயலர் ஜெயந்தன் ஆகியோருடன் தேர்தல் ஆணையாளர் டொக்டர் ராஜஜோகேஸ்வரன் ஆகியோரை   தொடர்புகொள்ளவும் .

உடல் நலம் தேறினார் பாடகி எஸ்.ஜானகி


MailPrint


தலையில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகி எஸ்.ஜானகி உடல் நலம் தேறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலக பாடகி எஸ்.ஜானகி (73) குளியலறையில் வழுக்கி விழுந்ததால் காயமடைந்து சிம்ஸ் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
தலையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு தையல் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் உடல்நலம் தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார்.
தற்போது அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்றும், விரைவில் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார் என்றும் அவர் மகன் தெரிவித்துள்ளார்.
பாடகி ஜானகி திரையுலகில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பல பாடல்களை தாமே எழுதி இசையமைத்துள்ளார்.
மேலும் சிறந்த பாடகியாக தெரிவு செய்யப்பட்டு 4முறை தேசிய விருது பெற்றவர் குறிப்பிடத்தக்கது.

நடிகர் வடிவேலு வழக்கை விசாரிக்க ஐகோர்ட் தடை

நடிகர் வடிவேலு வழக்கை விசாரிக்க ஐகோர்ட் தடை

Sunday, February 5, 2012

சிறிலங்காப் படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளிக்கும்


சிறிலங்காப் படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளிக்கும் சிறிலங்கா அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவவை சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற சிறிலங்கா படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறிலங்கா அதிபர் செயலகம் கூறியுள்ளது.

அதேவேளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒன்றில், சர்மிளாவின் தந்தை சந்திரசேகரன் கல்கமுவவில் சந்துருவனின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.


  

5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் யானை இனம் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு!


5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் யானை இனம் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு!

5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் எனப்படும் யானை இனம் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் எனப்படும் யானை இனம் பூமியில் வாழ்ந்து வந்தது.
யானை போன்ற தோற்றம் உள்ள இந்த மமொத்கள் 16 அடி உயரம்வரை வளரும். இதன் தந்தங்கள் ஆசிய நாட்டு யானையினுடையதைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.
சுமார் 8 -12 டென் எடைகொண்டதான இந்த மமோத்களும் யானைபோன்றே சுத்த சைவம். இலை தளைகளை தின்று வாழும். இதன் உடல் முழுவதும் ரோமங்கள் அடர்ந்து காணப்படும்.
இந்த மமோத்களை ஆதிகால மனிதர்கள் அதன் ரோமத்திற்க்காகவும் உணவிற்காகவும் வேட்டையாடினர். தட்ப வெட்ப மாறுதல் காரணமாகவும் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டது.
இந்த நிலையில் சைபீரிய நாட்டில் மமோத்தின் எலும்பு ஒன்று பனிக்கட்டிகளுக்கு அடியில் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது. இதனை ஆராய்ச்சி செய்த ரஷ்ய மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள், இதன் எலும்பில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.வை யானையின் கருமுட்டையில் செலுத்தி மீண்டும் இந்த மமோத் இனத்தை உருவாக்கமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி எதிர்வரும் 2012 ம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது. விஞ்ஞானிகள் இந்த முயற்சியில் வெற்றிபெறும்பட்சத்தில் இந்த மமோத் இனம் மீண்டும் புவியில் வலம்வரும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

Friday, February 3, 2012

நீதிக்கான நடை பயணம்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=K_wJBvefQoA
நீதிக்கான நடை பயணம் 
ஒரு வருடத்தின் பின்பு நான் மீண்டும் உங்களுடன். கடந்த ஆண்டில் சாதித்தது எதுவும் இல்லை.இந்த ஆண்டிலாவது ஏதாவது சாதிக்க முடிமா?உங்களின் உதவியுடன்,என்றுன்னிக்கொண்டு.தினம் ஒரு தகவல் தர முயற்சிப்பேன்.

Here's to another year of experience.