tamilveli

More than a Blog Aggregator

Monday, February 22, 2010

Black Grape - Power of Resveratrol

facebook
Thanabalasingam Sinnathamby
12:54am Feb 22nd
Black Grape - Power of Resveratrol
To Naresh T, Nisha Nathan, and thana1954.bala@blogger.com
 
good for you

Thanabalasingam has shared a link with you. To view it or to reply to the message, follow this link:

http://www.facebook.com/p.php?i=1709878678&k=ZXEUQY64RVTF6BD1QE34V4VVPVIB42YLV4HTE&oid=1329723333488
If you do not wish to receive this type of email from Facebook in the future, please click here to unsubscribe.
Facebook's offices are located at 1601 S. California Ave., Palo Alto, CA 94304.

Friday, February 19, 2010

சௌந்தர்யா ரஜினி நிச்சயதார்த்தம்


சௌந்தர்யா ரஜினி நிச்சயதார்த்தம்

Wednesday, February 17, 2010

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி

இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவித மான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண் டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய் களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத் தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த் தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்த னைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்த கைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க் கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உரு வாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதி யாக அழுத்தமானசூழலுக்கு உள்ளாகும் பொது மக்கள். என எந்த ஒரு துறையை எடுத் துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதி யற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாக வும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள், எதிர்பார்ப்புகள் அதிகம் இல் லாதவர்கள், அவர்கள் எதையும் ஆனந்தத்து டன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர் கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல் லாமல் வாழ முடிகிறது. ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார் கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவை யெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, பரீட்சை, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும். புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதைமருத்துப் பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டி னுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவை யெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய் வறிக்கை. எல்லா பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால் செருப்பு அணிகிறோம். அது போலவே மன அழுத் தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும். மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம் முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப் படுத்த வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தையே அளிக் கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த் துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன. அமைதியான குடும்பச் சூழல் பெரும் பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல் களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தின ரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.

ஆவேசம், கோபம் இவை மன அழுத் தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதி யான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைக்ரேன் எனப்படும் ஒற் றத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை மன அழுத்தம் கொண்டு வருகிறது.தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. அது தாயை யும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது என்கிறார் அமெரிக் காவின் மாயோ கிளினிக்ஸ் எனும் மருத்துவர் , எனவே தான் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை கேட்பது என மனதை இலகுவாக வைத் துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படு பவர்களை இந்த மன அழுத்தம் எளிதில் பிடித்துக் கொள்கிறது. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தம் உருவாகும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள். செய்ய முடியாத வேலைகளை "முடியாது' என்று மறுத்து விடும் உள்ள உரம் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க மிகவும் அவசி யம். எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுபவர்கள் பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது. உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் மனிதனுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க் காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது.

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல் பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது.நேர் சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். அதிக நேரப் பயணிக்க வேண்டியிருந்தால் அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும்."இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..' அல்லது "என்னை யாருக்கும் பிடிக்கவில்லை' இது போன்ற சிந்தனைகள் பரிதவிக்க வைத்து மன அழுத்தத்துக்குள் இட்டுச் செல்கிறது.

கனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர் மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் என மன அழுத்தம் மனதைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிடலாம்.தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய், என மன அழுத்தம் தரும் உடல் நோய்களும் ஏராளம்.இந்த மனம் உடல் சார்ந்த பாதிப்புகளினால் தன்னம்பிக்கைக் குறைபாடு, கோபம், எரிச்சல், சீரற்ற உணவு உண்தல், சீரற்ற தூக்கம், தனிமை விரும்புதல், கடமைகளைத் தவிர்த்தல், பதட்டம் உட்பட ஏராளமான செயல்களுக்கும் நம்மை அறியாமலேயே தள்ளப்பட்டு விடுகிறோம்.மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை அக்கியூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய் விடுகிறது.தொடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். அதிகப்படியான வேலை. ஏராளமான பணிகள், தினமும் தாமதாய் வருவதால் வரும் பிரச்சனை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது.இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்பசூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை குரோனிக் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கிறார்கள்.ட்ராமிக் ஸ்டெரெஸ் என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது. கணினித் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இறுக்கமற்ற சூழலை குடும்பங்களில் குழந்தைகளிடம் உருவாக்க அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வறிக்கையில் கீழ்க்கண்டவை பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சு??ழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க முயலுங்கள். அது இறுக்கமான சு??ழல்களை குழந்தைகள் சமாளிக்க பிற்காலத்தில் பயன்படும்.

குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியான கல்வியும் மன அழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள். தோல்வியும் வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக் கொண்டிருங்கள் அல்லது எதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும் வாய்ப்பு உண்டு.உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தை குடிக்கக் கூடாது என அறிவுரை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள், உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ள தூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். மன அழுத்தம் சிலவேளைகளில் நாமாகவே கர்ப்பித்துக் கொள்ளும் தவறான சிந்தனைகளின் மூலமாகவும் வரும் என்பது கண்கூடு. தேர்வை நன்றாக எழுதிய மாணாக்கர் கூட மன அழுத்தத்துடன் திரிவது இதனால் தான்.எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க். குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன் மனைவியரிடையே பிரச்சனை வரும்போது "உன்னால் தான் வந்தது' என்று பழியை மாறி மாறி சுமத்தாமல் "நமக்கு பிரச்சனை இருக்கிறது' எப்படி தீர்வு காண்பது எனும் கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே. மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து விழுக்காடும் நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பது தொன்னூறு விழுக்காடும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்விண்டால். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான்.பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.

அலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும். மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். * ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும். * வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள். * முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள். *கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை. * இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை. * தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள். * செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். *சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி. * செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் "மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள். * உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

எளிமையாக வாழுங்கள்.*

உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும். * ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள். * என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. * நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள். * வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள். * இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள். * பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும். * மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.

மருத்துவமனையில் டி.எம்.செளந்தரராஜன் அனுமதி





பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜனுக்கு மூளை நரம்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் டி.எம்.செளந்தரராஜனுக்கு 87 வயதாகிறது. சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஞாபக சக்தியும் குறையத் தொடங்கியது.

இதையடுத்து மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது மூளை நரம்பில், பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Tuesday, February 16, 2010

யார் இவர் தெரிகிறதா?


யார் இவர் தெரிகிறதா?
இந்த உலகில் இருந்து கொடிய சிங்களவர்களால் சத்தியமூர்த்தி நிக்கப்பட்டு ஒருவருடங்கள் ஆகிவிட்டது

Sunday, February 7, 2010

வியர்வை தெரபியால் ஒரு பயனும் இல்லை - நிபுணர்கள் எச்சரிக்கை

வியர்வை மூலம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி தேகத்தை சுத்தப்படுத்தலாம் எனக் கூறி ஏராளமான சிகிச்சை முறைகள் உலகெங்கும் பரவி வருகின்றன. ஆனால் இவற்றால் ஒரு பயனும் கிடையாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

'ஸ்வெட் ராப்ஸ்,' 'ஸ்வெட் லாட்ஜ்' போல ஏராளமான வியர்வை தெரப்பி முறைகள் பிரபலமாகி வருகின்றன.

ஆனால் உண்மையில் வியர்வையின் மூலம் உடலை சுத்தப்படுத்த முடியாது என்றும், நச்சுப் பொருட்களை வியர்வையின் மூலம் வெளியேற்ற முடியாது என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

உடல் வியர்த்தல் என்பது உடலின் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் ஒரு இயல்பான உடலியக்கம். மனிதர்களின் ரத்தம் சூடானது என்பதால், உடலில் அதிக உஷ்ணம் ஏற்படும் போது, உடனடியாக அதை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அதனால், உடல் அதிக உஷ்ணமடையும் சமயத்தில், வியர்வை நாளங்கள் வழியாக தண்ணீர் ஆவியாக வெளியேறி தோலையும் உடலையும் குளிர்விக்கிறது.

பொதுவாக வியர்வை திரவத்தில் அதிகளவு தண்ணீரும், சிறிய அளவில் சோடியம் குளோரைட், மீதைல் ஃபீனோல் உள்ளிட்ட வேதியல் சேர்க்கைகளும் காணப்படும்.

மற்றபடி, நச்சுப்பொருட்கள் வியர்வை வழியாக வெளியேறும் என்பதெல்லாம் தவறானவை என உடற்கூறு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நுரையீரலில் தான் போதை உள்ளிட்ட நச்சுப்பொருட்கள் ஒதுக்கப்படுமே தவிர, வியர்வை சுரப்பிகளுக்கு அந்த வேலையில்லை என்றும் கூறுகின்றனர்.

இந்த இயல்புக்கு மாறாக, நச்சுப்பொருட்களை வியர்வை மூலம் வெளியேற்ற முயற்சித்தால் அது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் அது முடியும் என்கின்றனர். கடந்த ஆக்டோபர் மாதம் 'ஸ்வெட் லாட்ஜ்' என்று கூட்டு பயிற்சியை நடத்திய ஜேம்ஸ் ஆர்தர் ரே, இதே பிரச்னைக்காக மனிதப் படுகொலை வழக்கில் சிக்கியதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவரின் கூட்டு வியர்வை பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பல்லாயிரம் டாலர்களை மக்கள் செலுத்தினர். ஆனால் அதில் அதீத விளைவுகள் ஏற்பட்டு மூன்று பேர் பலியானார்கள். 18 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்

Thursday, February 4, 2010

அஜீத்-விஜய் இணைந்து டான்ஸ்!


அஜீத்தும் விஜய்யும் சேர்ந்து பேசினாலே சிலிர்த்து போகிறது நாடு. சேர்ந்து ஆடினால்? அட... இது எப்போ? மேட்டரில் மேலும் கொஞ்சம் சர்க்கரையை போட்டுக் கொள்ளுங்கள் நண்பர்களே.

இந்த இரண்டு பேருடன் சேர்ந்து விக்ரமும் ஆடப் போகிறாராம்!



இம்மாதம் ஆறாம் தேதி முதல்வர் கலைஞருக்கு நடக்கவிருக்கும் பாராட்டு விழாவில்தான் இந்த ஆட்டத்தை போட போகிறார்கள் மூவரும். பொதுவாக எந்த விழாவாக இருந்தாலும் சைலண்ட்டாக ஓட்டமெடுப்பதுதான் அஜீத்தின் வழக்கம். அப்படி வந்தாலும் எவ்வித ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் அமைதியாக ரசித்துவிட்டு கிளம்பிவிடுவார். ஆனால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு முதல்வர் நிலம் கொடுக்கிறார் என்றதும் தாமே முன் வந்து ஸ்டேஜ் பர்பாமென்சுக்கு விருப்பம் தெரிவித்தாராம்.



முதல்வர் கலைஞர் எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் அந்த பாடலுக்குதான் இந்த மூவரும் மேடையேற போகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாடலில் அஜீத்-விஜய் சேர்ந்து ஆடுகிறார்கள் என்பதும் கூடுதல் அட்ராக்ஷன்தானே

Wednesday, February 3, 2010

தமிழீழத்தை ஒருபோதும் நாம் ஆதரிக்கவில்லை: இரா.சம்பந்தன்

தமிழீழத்தை ஒருபோதும் நாம் ஆதரிக்கவில்லை: இரா.சம்பந்தன்


தனிநாட்டு கோரிக்கையை நாம் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது, ஆனால் வடக்கு � கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை கொண்ட தீர்வை நாம் வலியுறுத்தி வருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.



நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:



ஓரு நாடு என்ற கொள்கையில் இருந்து நாம் விலகவில்லை என்பதை 1978 ஆம் ஆண்டு முன்வைத்த தீர்மானத்தில் தெரிவித்திருந்தோம்.



வடக்கு � கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட அதிக அதிகாரம் உள்ள நேர்மையான தீர்வுத்திட்டம் தொடர்பாக மகிந்தாவுடன் பேசுவதற்கு நான் தயாராக உள்ளேன்.



மகிந்தா ராஜபக்சாவினால் உருவாக்கப்பட்ட அனைத்துக்கட்சி குழு என்பது நேரத்தை கடத்தும் செயல் எனவும், எங்களை முட்டளாக்கும் நடவடிக்கை எனவும் அதில் கலந்துகொண்ட பின்னர் நாம் உணர்ந்துகொண்டோம்.



கடந்த நான்கு வருடங்களாக ஏமாற்றியது போலல்லாது, மகிந்தா உண்மையாகவே இனப்பிரச்சனை தொடர்பில் பேச விரும்பினால் நாம் அவருடன் பேசுவோம். ஜெனரல் பொன்சேகாவிற்கு போட்டியாக தானும் உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றப்போவதாக மகிந்தா தேர்தலின் போது தெரிவித்திருந்தார். ஆனால் அதனை நிறைவேற்ற வேண்டிய காலம் தற்போது வந்துள்ளது.



இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள அதிகாரப்பகிர்வு நடைமுறைகளை கருதினால் அந்த நாட்டு தலைவர்கள் முற்போக்கானவர்கள் என்பதை காணமுடியும். எனவே சிறீலங்கா முன்னேற்றம் காண்பதோ அல்லது சீரழிந்து போவதோ பெரும்பான்மை மக்களின் கைகளில் தான் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
   இது உண்மையானால் இதுவர காலமும் புலிகளுடன் சேர்ந்து எனசெய்திர்கள்  புலிகள் இல்லை என்றவுடன் சம்பந்தனுக்கு மட்டும் அல்ல பலருக்கு குளிர்விட்டு போய்விட்டது
போல் தெரிகின்றது      


இன்னுமொரு முள்ளிவாய்யக்காலா செங்கல்பட்டுச் சிறப்பு முகாம்?



செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீது நேற்று இரவு சிறப்பு அதிரடி காவல்துறையினர் கண்முடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.



மூன்று முகாம்வாசிகள் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்னிரெண்டு பேருக்கு மேற்பட்டோர் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முகாமில் மீதமுள்ள 16 பேருக்கு தண்ணீர் கொடுக்கக் கூட ஆள் இல்லை.

கடவுச்சீட்டு மற்றும் விடுதலைப்புலிகளின் தொடர்பாளர்கள் என சந்தேகித்த 33 ஈழத்தமிழர்களை செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும் பூவிருந்தவல்லி சிறப்பு முகாமிலும் அடைத்து வைத்துள்ளது தமிழக அரசு. இதில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள முகாம்வாசிகள் தங்களை விடுதலை செய்யவோ அல்லது நீதிமன்றத்தில் நிறுத்தவோ வலியுறுத்தி நீதி வழங்கக்கோரி அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.



நேற்று ரமாணா (33), முகமது ரக்சன் (24) மற்றும் சேகர் (27) முகாமில் உள்ள 60 மரத்தின் மீது ஏறி கொண்டும், மாற்ற முகாம்வாசிகள் கீழே தரையில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். மாலை நேரமாகியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டனர். க்யூ பிரிவு உயர் அதிகாரிகள் தங்களை நேரில் சந்தித்து உறுதிமொழி அளிக்க வேண்டும் என தெரிவித்து வந்தனர். உயர் அதிகாரிகள் இவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால், இரவாகியும் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.



இரவு 9.30 மணிக்கு தீடீரென நான்கு பட்டாலியன் அதிரடி காவல்துறையினர் ஆயுதங்களுடன் செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்குள் நுழைந்து, காலை மணி 5 வரை அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து முகாம்வாசிகளையும் கண்மூடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மரத்திலிருந்தவர்களை கீழே கொண்டு வரப்பட்டு நெய்யபுடைத்தெடுத்தனர். பயங்கர தாக்குதலால், பல முகாம்வாசிகள் படுகாயப்படுத்தப்பட்டனர். இதில் மூன்றுபேர் உயிருக்கு போராடு நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிரடிப்படையினர் முகாம்வாசிகளை அடித்ததோடு, முகாம் வாசிகளின் பயன்பாட்டிற்கு அறைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு முதலியன பொருட்களையும், துணி வகைகளையும் நடுகூடத்திற்கு கொண்டுவந்து போட்டு எரித்துள்ளனர்.



அத்தோடு இரவோடு இரவாய் 12க்கும் மேற்பட்ட முகாம்வாசிகளை சென்னை புழல் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். முகாமில் உள்ள 16 முகாம்வாசிகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூட முடியாத நிலை நிலவி வருகிறது. தற்போது வெளித்தொடர்புகள் அற்ற நிலையில், செங்கல்பட்டு சிறப்பு முகாம்வாசிகளின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.



முள்ளிவாய்யகாலில், இலங்கை இராணுவத்தின் பின்னணியில் நின்று ஈழத்தமிழர்க்ள் மீது இந்தியப்படைகள் தாக்குதல் தொடு்த்தனர் என ஆக்ரோஷமாக குரல் கொடுத்த தமிழக அரசியல்வாதிகளின் செவிகளுக்கு செங்கல்பட்டுச் செய்தி இன்னும் சென்றடையவில்லையா? . முகாம் தமிழருக்கும் இலவச டிவி வழங்கிய முதல்வருக்கும் இது தெரியாதா ?, பிரபாகரன் சமைத்தார், பிரபாகரன் நித்திரை கொண்டார், பிரபாகரன் வருவார் என வாரத்துக்கு வாரம் அட்டைப்பட கட்டுரைகள் வரையும் மீடியாக்களுக்கு செங்கல்பட்டு எட்டாத் தொலைவோ? என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்



இதே சமயம், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்காக சட்ட உதவிகள் அளித்துவரும் வழக்கறிஞர்கள், இவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் போலி வழக்குகள் என்று கூறுகின்றனர். வழக்கின் தன்மை எதுவாயினும் அவர்களுக்கு சட்ட ரீதியான நிவாரணம் பெற காவல் துறையினர் தடையாய் நிற்பது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



இவற்றையெல்லாம் அவதானிக்கையில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக செங்கல்பட்டுச் சிறப்பு முகாம் மாறுகிறதா? எனச் சந்தேகம் எழுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#Iran Launches New Space Rocket

#