Thursday, February 4, 2010
அஜீத்-விஜய் இணைந்து டான்ஸ்!
அஜீத்தும் விஜய்யும் சேர்ந்து பேசினாலே சிலிர்த்து போகிறது நாடு. சேர்ந்து ஆடினால்? அட... இது எப்போ? மேட்டரில் மேலும் கொஞ்சம் சர்க்கரையை போட்டுக் கொள்ளுங்கள் நண்பர்களே.
இந்த இரண்டு பேருடன் சேர்ந்து விக்ரமும் ஆடப் போகிறாராம்!
இம்மாதம் ஆறாம் தேதி முதல்வர் கலைஞருக்கு நடக்கவிருக்கும் பாராட்டு விழாவில்தான் இந்த ஆட்டத்தை போட போகிறார்கள் மூவரும். பொதுவாக எந்த விழாவாக இருந்தாலும் சைலண்ட்டாக ஓட்டமெடுப்பதுதான் அஜீத்தின் வழக்கம். அப்படி வந்தாலும் எவ்வித ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் அமைதியாக ரசித்துவிட்டு கிளம்பிவிடுவார். ஆனால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு முதல்வர் நிலம் கொடுக்கிறார் என்றதும் தாமே முன் வந்து ஸ்டேஜ் பர்பாமென்சுக்கு விருப்பம் தெரிவித்தாராம்.
முதல்வர் கலைஞர் எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் அந்த பாடலுக்குதான் இந்த மூவரும் மேடையேற போகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாடலில் அஜீத்-விஜய் சேர்ந்து ஆடுகிறார்கள் என்பதும் கூடுதல் அட்ராக்ஷன்தானே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment