இன்னுமொரு முள்ளிவாய்யக்காலா செங்கல்பட்டுச் சிறப்பு முகாம்?
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீது நேற்று இரவு சிறப்பு அதிரடி காவல்துறையினர் கண்முடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மூன்று முகாம்வாசிகள் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்னிரெண்டு பேருக்கு மேற்பட்டோர் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முகாமில் மீதமுள்ள 16 பேருக்கு தண்ணீர் கொடுக்கக் கூட ஆள் இல்லை.
கடவுச்சீட்டு மற்றும் விடுதலைப்புலிகளின் தொடர்பாளர்கள் என சந்தேகித்த 33 ஈழத்தமிழர்களை செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும் பூவிருந்தவல்லி சிறப்பு முகாமிலும் அடைத்து வைத்துள்ளது தமிழக அரசு. இதில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள முகாம்வாசிகள் தங்களை விடுதலை செய்யவோ அல்லது நீதிமன்றத்தில் நிறுத்தவோ வலியுறுத்தி நீதி வழங்கக்கோரி அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
நேற்று ரமாணா (33), முகமது ரக்சன் (24) மற்றும் சேகர் (27) முகாமில் உள்ள 60 மரத்தின் மீது ஏறி கொண்டும், மாற்ற முகாம்வாசிகள் கீழே தரையில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். மாலை நேரமாகியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டனர். க்யூ பிரிவு உயர் அதிகாரிகள் தங்களை நேரில் சந்தித்து உறுதிமொழி அளிக்க வேண்டும் என தெரிவித்து வந்தனர். உயர் அதிகாரிகள் இவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால், இரவாகியும் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
இரவு 9.30 மணிக்கு தீடீரென நான்கு பட்டாலியன் அதிரடி காவல்துறையினர் ஆயுதங்களுடன் செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்குள் நுழைந்து, காலை மணி 5 வரை அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து முகாம்வாசிகளையும் கண்மூடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மரத்திலிருந்தவர்களை கீழே கொண்டு வரப்பட்டு நெய்யபுடைத்தெடுத்தனர். பயங்கர தாக்குதலால், பல முகாம்வாசிகள் படுகாயப்படுத்தப்பட்டனர். இதில் மூன்றுபேர் உயிருக்கு போராடு நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிரடிப்படையினர் முகாம்வாசிகளை அடித்ததோடு, முகாம் வாசிகளின் பயன்பாட்டிற்கு அறைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு முதலியன பொருட்களையும், துணி வகைகளையும் நடுகூடத்திற்கு கொண்டுவந்து போட்டு எரித்துள்ளனர்.
அத்தோடு இரவோடு இரவாய் 12க்கும் மேற்பட்ட முகாம்வாசிகளை சென்னை புழல் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். முகாமில் உள்ள 16 முகாம்வாசிகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூட முடியாத நிலை நிலவி வருகிறது. தற்போது வெளித்தொடர்புகள் அற்ற நிலையில், செங்கல்பட்டு சிறப்பு முகாம்வாசிகளின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
முள்ளிவாய்யகாலில், இலங்கை இராணுவத்தின் பின்னணியில் நின்று ஈழத்தமிழர்க்ள் மீது இந்தியப்படைகள் தாக்குதல் தொடு்த்தனர் என ஆக்ரோஷமாக குரல் கொடுத்த தமிழக அரசியல்வாதிகளின் செவிகளுக்கு செங்கல்பட்டுச் செய்தி இன்னும் சென்றடையவில்லையா? . முகாம் தமிழருக்கும் இலவச டிவி வழங்கிய முதல்வருக்கும் இது தெரியாதா ?, பிரபாகரன் சமைத்தார், பிரபாகரன் நித்திரை கொண்டார், பிரபாகரன் வருவார் என வாரத்துக்கு வாரம் அட்டைப்பட கட்டுரைகள் வரையும் மீடியாக்களுக்கு செங்கல்பட்டு எட்டாத் தொலைவோ? என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்
இதே சமயம், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்காக சட்ட உதவிகள் அளித்துவரும் வழக்கறிஞர்கள், இவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் போலி வழக்குகள் என்று கூறுகின்றனர். வழக்கின் தன்மை எதுவாயினும் அவர்களுக்கு சட்ட ரீதியான நிவாரணம் பெற காவல் துறையினர் தடையாய் நிற்பது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவற்றையெல்லாம் அவதானிக்கையில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக செங்கல்பட்டுச் சிறப்பு முகாம் மாறுகிறதா? எனச் சந்தேகம் எழுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment