தமிழீழத்தை ஒருபோதும் நாம் ஆதரிக்கவில்லை: இரா.சம்பந்தன்
தனிநாட்டு கோரிக்கையை நாம் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது, ஆனால் வடக்கு � கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை கொண்ட தீர்வை நாம் வலியுறுத்தி வருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஓரு நாடு என்ற கொள்கையில் இருந்து நாம் விலகவில்லை என்பதை 1978 ஆம் ஆண்டு முன்வைத்த தீர்மானத்தில் தெரிவித்திருந்தோம்.
வடக்கு � கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட அதிக அதிகாரம் உள்ள நேர்மையான தீர்வுத்திட்டம் தொடர்பாக மகிந்தாவுடன் பேசுவதற்கு நான் தயாராக உள்ளேன்.
மகிந்தா ராஜபக்சாவினால் உருவாக்கப்பட்ட அனைத்துக்கட்சி குழு என்பது நேரத்தை கடத்தும் செயல் எனவும், எங்களை முட்டளாக்கும் நடவடிக்கை எனவும் அதில் கலந்துகொண்ட பின்னர் நாம் உணர்ந்துகொண்டோம்.
கடந்த நான்கு வருடங்களாக ஏமாற்றியது போலல்லாது, மகிந்தா உண்மையாகவே இனப்பிரச்சனை தொடர்பில் பேச விரும்பினால் நாம் அவருடன் பேசுவோம். ஜெனரல் பொன்சேகாவிற்கு போட்டியாக தானும் உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றப்போவதாக மகிந்தா தேர்தலின் போது தெரிவித்திருந்தார். ஆனால் அதனை நிறைவேற்ற வேண்டிய காலம் தற்போது வந்துள்ளது.
இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள அதிகாரப்பகிர்வு நடைமுறைகளை கருதினால் அந்த நாட்டு தலைவர்கள் முற்போக்கானவர்கள் என்பதை காணமுடியும். எனவே சிறீலங்கா முன்னேற்றம் காண்பதோ அல்லது சீரழிந்து போவதோ பெரும்பான்மை மக்களின் கைகளில் தான் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது உண்மையானால் இதுவர காலமும் புலிகளுடன் சேர்ந்து எனசெய்திர்கள் புலிகள் இல்லை என்றவுடன் சம்பந்தனுக்கு மட்டும் அல்ல பலருக்கு குளிர்விட்டு போய்விட்டது
போல் தெரிகின்றது
2 comments:
இது பற்றிய உங்களது கருத்து என்ன
Post a Comment