பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜனுக்கு மூளை நரம்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் டி.எம்.செளந்தரராஜனுக்கு 87 வயதாகிறது. சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஞாபக சக்தியும் குறையத் தொடங்கியது.
இதையடுத்து மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது மூளை நரம்பில், பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
No comments:
Post a Comment