Tuesday, June 29, 2010
உங்கள் இதயத்தை தாருங்கள் - ஒரு அதிர வைக்கும் வீடியோ
http://www.ted.com/talks/sunitha_krishnan_tedindia.html
சுனிதா கிருஷணன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் எட்டு பொறுக்கிகளால் கற்பழிக்கப்பட்டவர்.. தனக்கு நடந்த சம்பவத்தால் இடிந்து போனாலும்.., சரி நாம் இப்படியே இருந்து விடக்கூடாது என தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றும் செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்து தர விரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு என வாய்கிழிய பேசும் நம் இந்திய தேசத்தில் அவருக்கு நேர்ந்த பிரச்சினைகள் அநேகம்.. அவரை ஒரு கும்பல் தாக்கியதில் ஒரு காது கேட்காமலே போய்விட்டது..
ஆண்களால் பாதிக்கபட்ட யாரும் ஆண்களை சாடவும், ஆண்களின் பார்வையிலேயே தன்னையும் பார்ப்பார்கள், ஆனால் பாதிக்கபட்ட பெண்களை பற்றி யோசித்து அதோடு நில்லாமல் அவர்களுக்காக போராடி, அடிபட்டு வாழும் தேவதை சுனிதா கிருஷ்ணன்.
தான் காப்பாற்றிய குழந்தைகளை மனித மிருகங்கள் சில நான்கு வயது என்று கூட பார்க்காமல் சீரழித்த கொடூரம் ஆன்மீகமும், தெய்வத்தன்மையும் நிரம்பியுள்ள நம் தேசத்தில்தான் நடந்திருக்கிறது.. செக்ஸ் அடிமைகளாய் விற்கப்பட்ட அல்லது வறுமை காரணமாய் அல்லது விரும்பியே தொழில் செய்யும் பெண்கள் HIV ஆட்கொல்லி நோயில் விழும்போது அவர்களின் சம்பாத்தியத்தில் வாழும் அத்தனை பேரும் நிராதரவாய் விட்டுப் போகும் கொடூரமும் நம் தேசத்தில்தான் நடக்கிறது.
அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு வந்து அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து தகுந்த வேலை வாய்ப்பை தேடும்போது இந்த நாகரிக சமூகம் அவர்களை மனிதர்களாக பார்க்க மறுப்பது ஏன்.. வாரம் இரண்டாயிரம் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட ஒரு பெண்மணி தன் வீட்டு வேலைக்கு அந்த பெண்கள் வேண்டாம் என மறுக்கும்போது வருத்தமாயிருக்கிறது.
Sunday, June 27, 2010
Friday, June 25, 2010
உலகில் உங்கள் எதிர்ப்படும் எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா?
படித்ததில் பிடித்தது
அப்படியானால் வெறுப்பு எனும் கறுப்பு உணர்வை துடைத்து எறிய வேண்டும். அது முடியுமா? ஏன் முடியாது. குழந்தைகளாக இருக்கும்போது அந்த உணர்வு இல்லையே. வளர வளரத்தானே வெறுப்பு உணர்வும் வேர்விட்டு படர்ந்து விருட்சமாக வளர்ந்தது வெறுப்பு என்ற விரும்பத்தகாத ஒரு குணத்தை மட்டும் நீங்கள் கைவிட்டுப் பாருங்கள் உலகில் உள்ள அனைவருமே உங்களுக்கு நண்பர்களாகத் தான் இருப்பார்கள்.
குழந்தைகளாக இருக்கும்போது மனதில் துளிர்விடாத வெறுப்பு, சூழ்நிலையின் தாக்கத்தாலும், உடன் பழகுபவர்களாலும், வளர்ப்பாலும் நம் மனதில் மெல்ல குடிபுகுகிறது விளைவு? பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து, பக்கத்து நாடு வரை நமது வெறுப்பைக் காட்ட நேரிடுகிறது.
இந்த வெறுப்புணர்வால் நமக்கு கிடைப்பது ஒன்றுமில்லை. நண்பர்களின் வழிகாட்டால், உறவினர்களின் உதவி, பெற்றோர்களின் பாசம், ஆகியவற்றை இழப்பதுதான் மிச்சம். கடைசியில் நாம் தனிமரமாக நிற்க வேண்டியதுதான்.
பல வகைகளில் வெறுப்பு உருவெடுக்கும். ஒருவரின் இனம், குணம், நிறம், பேச்சு, மதம், பொருளாதாரம், பழக்கவழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த நச்சுக் குணம் நம் மனதில் குடிகொள்ளும்.நாம் பேசும் வெறுப்பான வார்த்தைகள், நம்மிலிருந்து தெறித்து, எதிர்படுபவர் மீது விழும்போது, அவர்களுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள தவறிவிடுகிறோம்.உங்கள் மனதிற்குள் வெறுப்புணர்வு நுழைந்துவிட்டால் அவ்வளவுதான்.அனைவருமே உங்களுக்கு எதிரியாக தோன்றுவார்கள்.பிறருடைய வளர்ச்சி உங்களை ஏளனம் செய்வது போல தெரியும்.வெறுப்புணர்ச்சியை ஒழிக்க இங்கே தரப்பட்டுள்ள 10 வழிகள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.
செயல்பாடு
==========
‘நீ எவ்வாறு நினைக்கிறாயோ அவ்வாறே வளர்வாய்.’’ இது ஒரு பழமொழி.உங்களுடைய நினைப்பும், செயல்பாடும் மிகவும் முக்கியம்.உங்களின் செயல்பாடும், பேச்சும் எவ்வாறு அமைய வேண்டும். பொறுமையையும், அன்பையும் வெளிக்காட்டுவதாக இருக்க வேண்டும்.உங்களுடைய செயல்பாடே, அனைத்து கெட்ட நிகழ்வுகளுக்கும், நல்ல நிகழ்வுகளுக்கும் அடிப்படை…உங்களுடன் பழகுவோரிடம் பொறுமையையும், அன்பையும் உணர்த்த வேண்டும்.இனம், நிறம், சாதி, மதம் பொருளாதாரக் காரணிகளால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும்.-அவர்களுக்கு ஆதரவான, ஆறுதலான வார்த்தைகளை வழங்க வேண்டும். நம்முடன் பழகுவோரிடமும் இந்த வெறுப்புக் காரணிகளைக் வெளிக்காட்டக் கூடாது.இந்தப் பழக்கத்தை உங்கள் மனதில் தொடர்ந்து நிலைநிறுத்தினால், நாளடைவில் உங்கள் வெறுப்புணர்வு ஒழிந்து அன்பு மலரும்.
ஒருங்கிணைப்பு :
===============
தனிப்பட்ட நபர் மீதோ அல்லது குழு மீதோ உங்களுக்கு வெறுப்புணர்ச்சி இருக்கலாம். அந்தக் குழுவினரையோ அல்லது தனிப்பட்ட நபரையோ நீங்கள் ஒதுங்கி வைப்பதுபோல் வேறு பலரும் ஒதுக்கி வைக்கலாம். வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி உள்ளவர்களை ஒன்றிணைத்து, பொறுமையின் முக்கியத்துவத்தையும், வெறுப்புணர்ச்சியின் பாதிப்புகளையும் எடுத்துரைக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி ஏன் மனதில் தோன்றுகிறது என்பதை ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்து அதை மனதிலிருந்து அகற்றுவதற்கான ஆலோசனைகளைக் கேட்க வேண்டும்.தொடக்கத்தில் வெறுப்புணர்ச்சி உள்ளவர்களை ஒன்றிணைப்பது சிறிது சிரமமாக இருக்கும்.நாளடைவில் குழு முறையில் அமர்ந்து அவர்களுடன் நீங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும்.இதன் மூலம் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படுவது நிச்சயம். பல்வேறு குணங்களைக் கொண்டோருடன் கலந்துரையாடி, மனம் விட்டுப் பேசுவதன் மூலம் நட்புறவு வளர்ந்து வெறுப்பு மறைவதற்கு வாய்ப்பு உண்டு.ஆகவே, வெறுப்புணர்ச்சியுள்ள நபரை ஒருங்கிணைத்து அவர்களுடன் கலந்துரையாடுங்கள். அந்தக் குணத்தை களைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
ஆதரவு :
==============
நமது வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் முக்கியம். உடல் ரீதியாக, மனரீதியாக, பாலின ரீதியாக மட்டுமின்றி, இனம், நிறம், சாதி பொருளாதார அடிப்படையில் கூட வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம். தாக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளில் இருந்து, சட்ட உதவிகள் வரை அனைத்து வகையிலும் ஆதரவு அளிப்பது அவசியம்.மற்றவர்களுக்கு உதவி செய்வதை சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். வேறு சிலரோ, யாரேனும் உதவி செய்ய முன்வர மாட்டார்களா என்று ஏங்கியிருப்பார்கள். அத்தகைய நபர்களை இனம் கண்டு ஆதரவு அளிப்பது வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.நாம் மட்டும் ஆதரவு அளித்தால் போதாது. நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி செய்ய வேண்டும்.
வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட பிரிவினரை நாம் அடிக்கடி சந்தித்து பேச வேண்டும். அவர்களுடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு அவர்களுக்குள் மெல்ல மறைவதற்கு இவை உதவும்.நீங்கள் தனியாக இல்லை. நான் உங்களுடன் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அளிக்கிறீர்கள் எனபதை மறந்து விடாதீர்கள். மதநம்பிக்கை உடையவர்களாக இருந்தால், அந்தந்த மதத்திற்குரிய சின்னங்கள், கடவுள்களின் படங்களை அளித்து நம்பிக்கை ஊட்டலாம்.வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வெறுப்புணர்வை பரப்பும் குழுக்களால் பாதிக்கப்படலாம். வார்த்தைகளாலோ அல்லது உடல்ரீதியாகவோ அவர்கள் தாக்கப்படலாம் என்று நீங்கள் நினைத்தால் அத்தகையோருக்கு பாதுகாப்பு அளிக்கலாம்
செயலில் இறங்குங்கள் :
===============================
வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ஆதரவு மட்டுமே அளிப்பது போதாது. வெறுப்புணர்வுடன் அலைபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.வெறுப்புணர்வு எங்கு உள்ளது. எப்படி, எதனால் உருவாகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட மக்களையும் இச்செயலில் ஈடுபடுத்தினால், அவர்களின் அனுபவ வார்த்தைகள் நிச்சயம் வெறுப்புணர்வுடன் இருப்பவர்களுடைய மனதையும் மாற்ற உதவி புரியும்.
மாற்றுவழிகளைக் கண்டுபிடியுங்கள் :
========================================
வெறுப்புணர்வை பரப்பும் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் ஒதுக்க வேண்டும்.ஒரு குறிப்பிட்ட பிரினருக்கு எதிரான கூட்டம் என்று தெரிந்தால் அதில் கலந்து கொள்ளாதீர்கள். அவர்களுக்கு எதிரான ஊர்வலத்தை புறக்கணியுங்கள். தனிப்பட்ட ஒருவருக்கு எதிரானதாக் இருந்தாலும் அதைக்கூட தவிர்த்து விடுங்கள்.உங்கள் அருகில் வெறுப்புணர்வை வளர்க்கும் விதத்தில் யாரேனும் பேசினாலோ அல்லது நடந்து கொண்டாலோ அவரகளிடம் வெறுப்புணர்வைக் குறைக்கும் வழிகளைக் கூறுங்கள்.அன்பையும், ஒற்றுமையும், மனித உரிமையின் அவசியத்தையும் அவர்களிடம் வலியுறுத்துங்கல். மனிதாபிமானத்துடன் மற்றவர்களுடன் பழக வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுங்கள். வெறுப்புணர்ச்சியை மறக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு மாற்றுவழிகளை தேட வேண்டும்.
போராட்டம் :
==============
மனம் முழுவதும் வெறுப்புணர்வை நிரப்பியவர்களை கண்டுபிடியுங்கள். அவர்களுடைய மனதிலிருந்து வெறுப்புணர்வை ஒழிக்கப் போராட்ட வேண்டும்.அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் ஒளிந்திருக்கும் வெறுப்புணர்வை எடுத்துக் காட்ட வேண்டும்.அதற்கு, நடுநிலையுடன் செயல்படும் நபர்கள், நிறுவனங்கள், நாளேடுகள் ஆகியவற்றை துணையாகக் கொள்ளுங்கள். ஆனால், எவ்விதத்திலும் வெறுப்பை ஒழிக்க வெறுப்புணர்வு உள்ளவர்களிடம் நேரடியாக மோதாதீர்கள். அவர்களை நேரடியாக கண்டிக்காதீர்கள். இப்படி செய்தால் அவர்களுடைய வெறுப்புணர்வை நாம் ஈட்ட வேண்டியது வரும்.மறைமுகமான வழிகள் மூலமாகவே போராட வேண்டும். வெறுப்புணர்வுடன் உள்ளவர்கள் கூடும் இடங்களை தேடிப்பிடியுங்கள்.பொறுமையின் அவசியத்தையும், அன்பின் முக்கியத்துவத்தையும் அங்கு பரப்புங்கள். வீடுகள் தோறும் பிரச்சாரம் செய்யுங்கள். இணையதளங்கள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள், நாளேடுகள் வாயிலாக பரப்புங்கள்.
புகழ்பெற்றவர்கள் மூலம் பிரச்சாரம் :
==================================
வெறுப்புணர்வை ஒழிக்க முகம் தெரியாத நாம் கூறும் கருத்துகளையும், ஆலோசனையைக் காட்டிலும், தெரிந்த ஒரு முக்கிய நபர் மூலமாக வெறுப்புணர்வுக்கு எதிரானக் கருத்துகளைப் பரப்பலாம். நடிகர், நடிகைகள், கட்சித் தலைவர்கள், ஊர் பெரியோர்கள், மதத்தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மூலமாக வெறுப்புணர்வை ஒழிக்கும் வழிகளை எடுத்துக் கூறுவதன் மூலமாக கருத்துகள் 100 மடங்கு விரைவாக அனைவரையும் சென்றடையும். இத்தகைய புகழ் பெற்றவர்கள் மூலமாக கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் நடத்துவது பிரச்சாரம் செய்வது போன்றவற்றின் மூலம் வெறுப்புணர்வு உள்ளவர்களையும் இணைத்து அவர்கள் மனதில் உள்ள குணத்தை ஒழிக்கச் செய்யலாம். அதற்கான பாதிப்பும் நிச்சயம் இருக்கும்.
தொலை நோக்கு :
வெறுப்புணர்வை தற்சமயத்திற்கு மட்டும் ஒழிக்காமல், எதிர்காலத்தில் அத்தகைய குணம் மனதில் தோன்றாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு நம் எண்ணங்களையும், செயல்களையும், சிந்தனைகளையும் அகலப்படுத்திக் கொள்வது முக்கியம். வெறுப்புணர்வு என்பது முதலில் நம்முடைய வீட்டில் இருந்துதான் தொடங்குகிறது. நம் மனதிலிருந்துதான் தொடங்குகிறது. அதை எவ்வாறு வேரறுப்பது என்பதை சிந்திக்க வேண்டும். வெறுப்புணர்வை ஒழிக்க மிகச்சிறந்த வழி பொறுமை என்று மனோவியல் வல்லுநர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆதலால் பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். எப்போதும் ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு பிரிவினரைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் மனதில் அவர்கள் குறித்த தவறான எண்ணங்களை வளர்க்கும் பழக்கத்தை அழிக்க வேண்டும். இந்த எண்ணமாற்றம் மனதில் உதித்துவிட்டால் செயல்பாடுகளில் நிச்சயம் மாற்றம் வரும். தவறான, முழுவிவரம் தெரிந்து கொள்ளாமல் வரும் எண்ணங்களே வெறுப்புணர்வுக்கு அடிப்படை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பொறுமையைக் கற்றுக்கொடுங்கள் :
-------------------------------------------------------------\
விதை நன்றாக இருந்தால் விளையும் பொருளும் நன்றாக இருக்கும். ஆதலால், வெறுப்புணர்வை ஒழிக்கும் நடவடிக்கையை குழந்தைகளிடமிருந்து தொடங்குவது சிறந்தது. அவர்களுக்குப் பொறுமையின் முக்கியத்துவத்தையும், சக மாணவர்களிடம், தோழிகளிடம் காட்டும் அன்பின் அவசியத்தையும் எடுத்துக் கூற வேண்டும். இன, மத, பொருளாதார உணர்வுகளில் உண்டாகும் வெறுப்புகளால் விளையும் தீமைகளை எடுத்துக்கூற வேண்டும்.நல்ல கதைகள், நாடகங்கள், பாடங்கள், பாடல்கள், ஓவியங்கள் மூலமாகவும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் பங்கேற்கச் செய்யலாம். யோகா, இசை, உள்ளிட்டவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தி, அதன் மூலமாக பிறரிடம் வெறுப்புணர்வை காட்டாமல் இருப்பது குறித்து உணர்த்தலாம்.
உங்களைச் சோதித்துக் கொள்ளுங்கள்
=========================================
உங்கள் மனதில் பிறரைப்பற்றிய தவறான எண்ணங்கள், முழுமையாக அறியாமல் வளர்த்துக் கொண்டுள்ள தவறிய கணிப்புகள் ஆகியவற்றை வெளிக்கொணருங்கள். அவை எவ்வாறு உருவானது என்பதற்கு காரணத்தைத் தேடுங்கள்.
Written by Thurai

Saturday, June 19, 2010
சிங்கத்தின் உயர்ந்த பண்பு அவனுக்கு உயிருபாதை....
படித்ததி பிடித்தது
-----------------------------
காட்டு வழியே தனியே நடந்து போவது அவனுக்கு ரொம்ப பயமாய்த்தான் இருந்த்து.
பயங்கர சப்தங்கள். திக் திக் என்றிருந்த்து. மெதுவாக நடந்தான்
போச்சு !!!
தூரத்தில் ஒரு சிங்கம் நடந்து வருவது தெரிந்த்து. இவனுக்கு சர்வ அவயங்களும் வேர்த்த்து. அவசரமாக குழப்பமாக எல்லா சொந்தக்கார முகமும் நினைவில் வந்து போனது. தொலைந்தோம். தப்பிக்க வழியே இல்லை !!. எல்லா கடவுளும் ஞாபகத்துக்கு வந்தனர்.
”சரி.. பகவான் தான் காப்பாத்தனும்… கண்ணை மூடிக் கொண்டான். பயத்தில் ஒரு ஸ்லோகமும் சரியாக வரவில்லை. .. நாம ஜெபம் செய்வோம்..
இன்னுமா சிங்கம் பக்கத்தில் வரவில்லை.. நாம ஜெபம். பலித்துவிட்ட்தா !!!”
பயத்துடன் ஒரு கண்ணை திறந்து பார்த்தான்.. ஒரே ஆச்சர்யம். சிங்கம் இவன் எதிரில் கண்மூடி எதோ முணு முணுத்துக் கொண்டிருந்த்து.
”ஆஹா… தப்பித்தோம் போலிருக்கு.. இன்னும் விடாம சொல்லுவோம்.. “ நாம ஜெபம் அழுத்தமாக தொடர்ந்தது. கொஞ்சம் பயம் குறைந்த மாதிரி இருந்த்து.கண்ணைத் திறந்தான். சிங்கமும் கண்ணைத் திறந்த்து.தப்பித்து விட்டோம்….
சிங்கத்திடம் சிநேகமாக கை நீட்டி, “ வந்தனம் சகோதரா.. மிக்க நன்றி “ என்றான்.
சிங்கம், “ வந்தனம்.. உணவு அருந்தும் முன்பு இறை வணக்கம் செய்வது என் வழக்கம்’ என்றது....

எல்லா அப்பாக்களுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
Sunday, June 13, 2010
புதிர்
இந்த படத்திலே ஒரு வரலாற்று புகழ்மிக்க இடம் உண்டு.அது என்ன என்பது உங்களுக்கு தெர்யுமா?
தெரியாவிட்டால் கீழே
செல்லுங்கள்
எதாவதா விடை கிடைத்ததா ?
இல்லையா?
அது தாங்க
சிவனொளிபதமலை. மரத்தடியி நின்று பாருங்கக் தூர தெரியும் மலை தான் அது. கும்பிடுபவர்கள் கும்பிட்டுக்கொங்கோ .

Saturday, June 12, 2010
மருத்துவம் மாரடைப் பு
மாரடைப்பு உட்பட்ட இதய வலி நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் காரணிகள்.
மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் காரணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாஒன்று மாற்ற முடியாத காரணிகள் .அதாவது இயற்கையாகவே அமையப் பெற்ற காரணிகள் .இவற்றை நாம் மாற்ற முடியாது.உதாரணமாக ஆண்கள், வயதானவர்கள், இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டவர்கள் போன்றோரில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் சற்று அதிகம் ஆனாலும் இது சம்பந்தமாக நம்மால் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது.
ஆனால் அடுத்த வகையான காரணிகள் காட்டுப் படுத்தக் கூடியவை.மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் , ஆனால் நம்மால் கட்டுப் படுத்தக் கூடிய காரணிகள்.
நீரழிவு நோய் – இந்த நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் ஆனாலும் இவர்கள் ஒழுங்காக மருந்துகளை பாவிப்பதன் மூலமும் , உணவுக் கட்டுப் பாட்டின் மூலமும் இந்த நோயை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைகுறைக்கலாம்.
புகைத்தல்- புகைத்தல் மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஆனாலும் புகைக்காத நபர்களில் கூட மாரடைப்பு ஏற்படலாம்.
அதிகரித்த கொழுப்பு /கொலஸ்ரோல் – சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் நமது கொலஸ்ரோலை கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் நமக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள முடியும். அப்படியும் இது கட்டுப்படுத்தப் பட முடியாவிட்டால் கொலஸ்ரோலைக் குறைப்பதற்கான மருந்துகள்பாவிக்கப்
உயர் குருதி அமுக்கம்(Hyper Tension) – இந்த நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். சரியான மருந்துகள் , உடற்பயிற்சி,உணவுக் கட்டுப் பாடு மூலம் இதையும் நாம் கட்டுப் பாடாக வைத்திருந்து மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள
மன அழுத்தம்(stressful life) – அதிகரித்த மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.தியானம் போன்ற ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைக் குறைக்கலாம்.

Friday, June 11, 2010
Wednesday, June 9, 2010
ராஜபக்சேயுடன் வந்திருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய கோரி வழக்கு
ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சரும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியுமான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகமக்கள் உரிமைக் கழக செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார்
ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சரும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியுமான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகமக்கள் உரிமைக் கழக செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு
இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்தார். இவர் அலுவல் ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார்.1986-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
வெளியே வந்த பிறகு, 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். 1989-ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார். இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Sunday, June 6, 2010
தமிழினமே உனக்கென்றோர் கடமை உண்டு அது?????????????? என்றால் சிந்தி !சிந்தி !!!!!!!!!!!!!!!!!!
சனல் 4 தொலைக்காட்சிக்கு விருது கொடுத்தவர்களுக்கு எம் இனத்தின் சார்பாக நன்றிகள் பலகோடிகள்.ஆனால் ஒன்று செய்தி ஆக்கிய உங்களுக்கு விருதென்றால் எங்களுக்கு பிணவாடை மட்டும் தான? இது புரியவில்லையே எம் அயல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணை இல்லா கருணாநிதிக்கு. கொண்டாடுகிறார் செம்மொழி குத்தடிக்கிறார் சோனியாவோடு. இதற்கு எதிப்போரும் உண்டு அவர்களுக்கு என் நன்றிகள் (எதிப்புக்காக மட்டும் உங்கள் அரசியலுக்கல்ல) ஆதரிப்போருக்கு ஒன்றுமட்டும் சொல்வேன் உனக்கு பக்கத்தில் உன் உறவுகளின் பிணவாடை வீசும் ஒருநாள் அப்போது நீ கவி படைப்பாய் எமக்காய் !
தமிழினமே உனக்கென்றோர் கடமை உண்டு அது?????????????? என்றால் சிந்தி !சிந்தி !!!!!!!!!!!!!!!!!!
தமிழினமே உனக்கென்றோர் கடமை உண்டு அது?????????????? என்றால் சிந்தி !சிந்தி !!!!!!!!!!!!!!!!!!
Friday, June 4, 2010
நீங்கள் கர்ப்பவாதியா ? அப்படியானால் இதை படிங்க
தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு! |
|
கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும். கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. மூளை வளர்ச்சிக்கு முக்கியமான omega-3 fatty acids’ (docosahexaenoic acid)மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். தாய், சிசுவின் உடலில் ‘omega-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது. 32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது |
Wednesday, June 2, 2010
தமிழ் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதல் – யாழ். சிறை சம்பவம்!
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிலர் சிறை அதிகாரிகளினால் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுரமான முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தை நேரடியாக கண்ட பொதுமகன் ஒருவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் அறிவித்தமையை அடுத்து நீதிபதி இ.த.விக்னராஜா நேற்று இந்த விடயம் தொடர்பாக விளக்கத்தை கோரினார்.
இதனையடுத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது நேற்றைய தினமே உறுதிசெய்யப்பட்டது. அத்துடன் சிறை அதிகாரிகளால் தாக்குதல்களுக்கு உள்ளான அரசியல் கைதிகள் காயங்களுடன் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இவர்களின் வாக்குமூலங்கள் நாளை பெறப்படவுள்ளன.
சிறை யன்னல் கம்பி ஒன்று அகற்றப்பட்டிருந்ததை கண்ட சிறைக்காவலர்கள் அது கைதிகள் தப்பி செல்வதற்காகவே அகற்றப்பட்டிருப்பதாக கூறியே அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)