tamilveli

More than a Blog Aggregator

Tuesday, June 29, 2010

உங்கள் இதயத்தை தாருங்கள் - ஒரு அதிர வைக்கும் வீடியோ


http://www.ted.com/talks/sunitha_krishnan_tedindia.html
சுனிதா கிருஷணன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் எட்டு பொறுக்கிகளால் கற்பழிக்கப்பட்டவர்.. தனக்கு நடந்த சம்பவத்தால் இடிந்து போனாலும்.., சரி நாம் இப்படியே இருந்து விடக்கூடாது என தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றும் செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்து தர விரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு என வாய்கிழிய பேசும் நம் இந்திய தேசத்தில் அவருக்கு நேர்ந்த பிரச்சினைகள் அநேகம்.. அவரை ஒரு கும்பல் தாக்கியதில் ஒரு காது கேட்காமலே போய்விட்டது..

ஆண்களால் பாதிக்கபட்ட யாரும் ஆண்களை சாடவும், ஆண்களின் பார்வையிலேயே தன்னையும் பார்ப்பார்கள், ஆனால் பாதிக்கபட்ட பெண்களை பற்றி யோசித்து அதோடு நில்லாமல் அவர்களுக்காக போராடி, அடிபட்டு வாழும் தேவதை சுனிதா கிருஷ்ணன்.

தான் காப்பாற்றிய குழந்தைகளை மனித மிருகங்கள் சில நான்கு வயது என்று கூட பார்க்காமல் சீரழித்த கொடூரம் ஆன்மீகமும், தெய்வத்தன்மையும் நிரம்பியுள்ள நம் தேசத்தில்தான் நடந்திருக்கிறது.. செக்ஸ் அடிமைகளாய் விற்கப்பட்ட அல்லது வறுமை காரணமாய் அல்லது விரும்பியே தொழில் செய்யும் பெண்கள் HIV ஆட்கொல்லி நோயில் விழும்போது அவர்களின் சம்பாத்தியத்தில் வாழும் அத்தனை பேரும் நிராதரவாய் விட்டுப் போகும் கொடூரமும் நம் தேசத்தில்தான் நடக்கிறது.

அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு வந்து அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து தகுந்த வேலை வாய்ப்பை தேடும்போது இந்த நாகரிக சமூகம் அவர்களை மனிதர்களாக பார்க்க மறுப்பது ஏன்.. வாரம் இரண்டாயிரம் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட ஒரு பெண்மணி தன் வீட்டு வேலைக்கு அந்த பெண்கள் வேண்டாம் என மறுக்கும்போது வருத்தமாயிருக்கிறது.

No comments: