Wednesday, June 2, 2010
தமிழ் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதல் – யாழ். சிறை சம்பவம்!
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிலர் சிறை அதிகாரிகளினால் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுரமான முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தை நேரடியாக கண்ட பொதுமகன் ஒருவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் அறிவித்தமையை அடுத்து நீதிபதி இ.த.விக்னராஜா நேற்று இந்த விடயம் தொடர்பாக விளக்கத்தை கோரினார்.
இதனையடுத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது நேற்றைய தினமே உறுதிசெய்யப்பட்டது. அத்துடன் சிறை அதிகாரிகளால் தாக்குதல்களுக்கு உள்ளான அரசியல் கைதிகள் காயங்களுடன் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இவர்களின் வாக்குமூலங்கள் நாளை பெறப்படவுள்ளன.
சிறை யன்னல் கம்பி ஒன்று அகற்றப்பட்டிருந்ததை கண்ட சிறைக்காவலர்கள் அது கைதிகள் தப்பி செல்வதற்காகவே அகற்றப்பட்டிருப்பதாக கூறியே அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment