tamilveli

More than a Blog Aggregator

Saturday, June 19, 2010

சிங்கத்தின் உயர்ந்த பண்பு அவனுக்கு உயிருபாதை....

படித்ததி பிடித்தது
-----------------------------
காட்டு வழியே தனியே நடந்து போவது அவனுக்கு ரொம்ப பயமாய்த்தான் இருந்த்து.
பயங்கர சப்தங்கள். திக் திக் என்றிருந்த்து. மெதுவாக நடந்தான்
போச்சு !!!
தூரத்தில் ஒரு சிங்கம் நடந்து வருவது தெரிந்த்து. இவனுக்கு சர்வ அவயங்களும் வேர்த்த்து. அவசரமாக குழப்பமாக எல்லா சொந்தக்கார முகமும் நினைவில் வந்து போனது. தொலைந்தோம். தப்பிக்க வழியே இல்லை !!. எல்லா கடவுளும் ஞாபகத்துக்கு வந்தனர்.
”சரி.. பகவான் தான் காப்பாத்தனும்… கண்ணை மூடிக் கொண்டான். பயத்தில் ஒரு ஸ்லோகமும் சரியாக வரவில்லை. .. நாம ஜெபம் செய்வோம்..
இன்னுமா சிங்கம் பக்கத்தில் வரவில்லை.. நாம ஜெபம். பலித்துவிட்ட்தா !!!”
பயத்துடன் ஒரு கண்ணை திறந்து பார்த்தான்.. ஒரே ஆச்சர்யம். சிங்கம் இவன் எதிரில் கண்மூடி எதோ முணு முணுத்துக் கொண்டிருந்த்து.
”ஆஹா… தப்பித்தோம் போலிருக்கு.. இன்னும் விடாம சொல்லுவோம்.. “ நாம ஜெபம் அழுத்தமாக தொடர்ந்தது. கொஞ்சம் பயம் குறைந்த மாதிரி இருந்த்து.கண்ணைத் திறந்தான். சிங்கமும் கண்ணைத் திறந்த்து.தப்பித்து விட்டோம்….
சிங்கத்திடம் சிநேகமாக கை நீட்டி, “ வந்தனம் சகோதரா.. மிக்க நன்றி “ என்றான்.
சிங்கம், “ வந்தனம்.. உணவு அருந்தும் முன்பு இறை வணக்கம் செய்வது என் வழக்கம்’ என்றது....

No comments: