tamilveli

More than a Blog Aggregator

Sunday, February 5, 2012

5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் யானை இனம் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு!


5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் யானை இனம் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு!

5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் எனப்படும் யானை இனம் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் எனப்படும் யானை இனம் பூமியில் வாழ்ந்து வந்தது.
யானை போன்ற தோற்றம் உள்ள இந்த மமொத்கள் 16 அடி உயரம்வரை வளரும். இதன் தந்தங்கள் ஆசிய நாட்டு யானையினுடையதைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.
சுமார் 8 -12 டென் எடைகொண்டதான இந்த மமோத்களும் யானைபோன்றே சுத்த சைவம். இலை தளைகளை தின்று வாழும். இதன் உடல் முழுவதும் ரோமங்கள் அடர்ந்து காணப்படும்.
இந்த மமோத்களை ஆதிகால மனிதர்கள் அதன் ரோமத்திற்க்காகவும் உணவிற்காகவும் வேட்டையாடினர். தட்ப வெட்ப மாறுதல் காரணமாகவும் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டது.
இந்த நிலையில் சைபீரிய நாட்டில் மமோத்தின் எலும்பு ஒன்று பனிக்கட்டிகளுக்கு அடியில் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது. இதனை ஆராய்ச்சி செய்த ரஷ்ய மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள், இதன் எலும்பில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.வை யானையின் கருமுட்டையில் செலுத்தி மீண்டும் இந்த மமோத் இனத்தை உருவாக்கமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி எதிர்வரும் 2012 ம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது. விஞ்ஞானிகள் இந்த முயற்சியில் வெற்றிபெறும்பட்சத்தில் இந்த மமோத் இனம் மீண்டும் புவியில் வலம்வரும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

No comments: