tamilveli

More than a Blog Aggregator

Sunday, February 5, 2012

சிறிலங்காப் படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளிக்கும்


சிறிலங்காப் படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளிக்கும் சிறிலங்கா அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவவை சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற சிறிலங்கா படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறிலங்கா அதிபர் செயலகம் கூறியுள்ளது.

அதேவேளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒன்றில், சர்மிளாவின் தந்தை சந்திரசேகரன் கல்கமுவவில் சந்துருவனின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.


  

No comments: