புகைவண்டிப் பயணம் நீண்ட பயணம் சலிப்பு தட்டாமல் இருக்க படித்த ஒருவர் எதிரே
இருந்த பயணியைப் பார்த்து நாம் இருவரும் விடுகதைப் போட்டு பேசிக் கொண்டே
போகலாமே என்றார். எதிர்த்து அமர்ந்து இருந்த பாமரர் சரியென்று சொன்னார். படித்தவர் சொன்னார், சும்மா சொல்லி சென்றால் சுராசியம் இருக்காது எனவே நான்
படித்தவன் நாலும் தெரிந்தவன் நான் தோற்றால் உமக்கு ரூபாய் 2 கொடுப்பேன், நீர்
தோற்றால் எனக்கு ரூபாய் 1 மட்டும் கொடுத்தால் போதும் என்றார். நீரே தொடங்கும்
பார்க்கலாம் என்றார் படித்தவர்.
பாமரர் தொடங்கினார், ஐயா எட்டு காலு, ஒன்பது வாய், பத்து கை அது என்ன என்றார்.
படித்தவர் தலையை பிய்த்துக் கொள்ளாத நிலையாக, தலையை சொரிந்து கொண்டே சொன்னார்.
தெரியவில்லை சொன்னபடியே நான் முதலிலேயே ரூபாய் 2 தந்து விடுகின்றேன் என்று
ரூபாய் 2 கொடுத்தார்.
வாங்கிக் கொண்டு பாமரர் ரூபாய் 1யை திரும்பக் கொடுத்து விட்டு சொன்னார், ஐயா
எனக்கும் அது தெரியாது என்று.
படித்தவர்கள் தங்களது படிப்பு தரும் அறிவினால், ஆணவம் கொள்ளாது, தாழ்ச்சி
கொண்டு நடந்தால் இன்னும் அதிகம் அறிவு பெறலாம்.
நன்றி
ஜோசப் பி கே
No comments:
Post a Comment