tamilveli

More than a Blog Aggregator

Tuesday, July 27, 2010

எடை குறைக்க ஆசையா? காலையில் முட்டை சாப்பிடுங்க!

 .அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது. காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது.

அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும். அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது.

அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. “உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம்.

இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது” .

No comments: