tamilveli

More than a Blog Aggregator

Wednesday, July 21, 2010

சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று.
சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.

எது உண்மை? எது பொய்?
இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!

1.சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது!

சாப்பிடக்கூடிய பழங்கள்:           சாப்பிடக்கூடாத பழங்கள்:

1.ஆப்பிள்                                        1.மாம்பழம்

2.ஆரஞ்சு                                        2.வாழை

3.சாத்துக்குடி                                 3.பலாப்பழம்

4.மாதுளை                                    4.சப்போட்டா

5.கொய்யா                                    5.திராட்சை

6.பப்பாளி 6.சீதாப்பழம்

7.தர்பூசணி

8.அன்னாசி

9.எலுமிச்சை

10.தக்காளி

11.நெல்லிக்காய்
.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகத்தை பாதிக்கும்.

3.பழங்களில் உள்ள மாவுச்சத்தின் பெயர்- ஃப்ரக்டோஸ்( குளுக்கோஸ் அல்ல). இது ஜீரணமாக இன்சுலின் தேவையில்லை. இதனை அளவோடு உண்டால் சக்கரை கூடாது. அதிகம் உண்டால் இது ஈரலுக்கு சென்று குளுக்கோஸாக மாறிவிடும்.
4.நமது உடலுக்குத் தேவையான மாவுச்சத்து 60% தானியங்களிலிருந்து கிடைக்கிறது. இதில் 10% பழங்களிலிருந்து எடுத்துக்கொண்டால் தானிய மாவுச்சத்து 50% ஆகக் குறையும்.
5.பழங்களில் உள்ள நார்ச்சத்து சக்கரை விரைவாக உயர்வதைத் தடுக்கிறது., மலச்சிக்கலைத் தடுக்கிறது,பசியைக் கட்டுப்படுத்துகிறது,வயிறு நிறைவை ஏற்படுத்துகிறது.

No comments: